அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் 2 வயது குழந்தையிடம் தென்பட்ட அறிகுறி
ஐதராபாத்: கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திரா வந்த 2 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டுள்ளதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆந்திராவில் குழந்தை ஒன்றுக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் குரங்கு அம்மை நோய் பரவ துவங்கியது.

60 நாடுகளில் குரங்கு அம்மை
இதையடுத்து தற்போது சுமார் 60க்கும் அதிகமான நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனமும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் குரங்கு அம்மை தொற்று தொடர்பாக ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.

கேரளாவில் ஒருவர் பாதிப்பு
இதனால் இந்தியாவிலும் குரங்கம்மை நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய அரசு அறிவுரைகள் வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த 12ம் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா திரும்பிய 35 வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது. தற்போது அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைக்கு அறிகுறி
இந்நிலையில் தான் தற்போது ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு விமானத்தில் ஒரு குடும்பத்தினர் வந்தனர். மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது 2 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தையின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கண்காணிப்பு
கேரளா, ஆந்திராவில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடக்கிறது. அதோடு குரங்கு அம்மை பாதிப்பு உள்ளதாக அறியப்பட்டுள்ள 63 வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு குரங்கு அம்மை பரிசோதனை நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications