Bye Bye Modi! தெலங்கானாவில் அணிவகுத்த பேனர்கள்! பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்த கேசிஆர் கட்சி
ஐதராபாத்: ஐதராபாத்தில் பாஜக சார்பில் இன்றும், நாளையும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத் வந்த நிலையில் அவருக்கு எதிராக ‛Bye Bye Modi' என எழுதப்பட்டது உள்பட ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டன.
ஐதராபாத்தில் இன்றும் நாளையும் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

ஐதராபாத்துக்கு பிரதமர் மோடி வருகை
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ஐதராபாத் சென்றார். இன்று மதியம் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. செயற்குழு கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா துவக்க உரை ஆற்றுவார். அதனை தொடர்ந்து பிற தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். 2வது நாளான நாளை பாஜக சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.

பாஜகவின் வரவேற்பு பேனர்கள்
இந்த செயற்குழு கூட்டத்துக்கு மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மாநில தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், கட்சிசார்ந்த் பொறுப்புகளில் உள்ளவர்கள் வர உள்ளனர். இதனால் ஐதராபாத் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பாஜக சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டன.

எதிர்ப்பு பேனர்
இதற்கு தெலங்கானாவை ஆட்சி செய்யும் ராஷ்டிரிய சமிதி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து பேனர்கள் வைத்துள்ளனர். இந்த பேனர்களும் பல இடங்களில் உள்ளது. எங்களுக்கு கேசிஆர்(முதல்வர் சந்திரசேகரராவ்) போதும்; நீங்கள்(பிரதமர் மோடி) வேண்டாம். கேசிஆர் போதும்; கேசிஆர் மட்டுமே போதும். மோடி வேண்டாம்; மோடி எப்போதும் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில பேனர்களில் Bye Bye Modi என எழுதப்பட்டுள்ளது.

பேனர் அகற்றம்
அதோடு பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான பொருளாதார கொள்கை, விவசாயிகளுக்கான மசோதா, கொரோனா ஊரடங்கு உள்ளிட்டவற்றுக்கு எதிரான வாசகங்களும், 8 ஆண்டு மோடி ஆட்சியில் மக்கள் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அவமானப்படுத்தும் வகையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி முயற்சி மேற்கொள்கிறது. இதனை அகற்ற வேண்டும் என பாஜக சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. இதை ஏற்று Bye Bye என குறிப்பிடப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

மோடியை வரவேற்காத கேசிஆர்
முன்னதாக இன்று ஐதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க தெலங்கானா முதல்வரான சந்திரசேகரராவ் செல்லவில்லை. மாறாக ஆதரவு கோரி சென்ற எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை, சந்திரசேகரராவ் வரவேற்றார். இதற்கிடையே கடந்த 6 மாதத்தில் மட்டும் இன்றுடன் சேர்த்து பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தெலங்கானா சென்றுள்ளார். இந்த 3 முறையும் பிரதமர் நரேந்திர மோடியை, சந்திர சேகரராவ் வரவேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications