மெட்ராஸ் சென்னையாகும் போது ஹைதராபாத் ஏன் பாக்யாநகர் என மாறக் கூடாது? மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
ஹைதராபாத்: தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைத்தால் ஹைதராபாத் நகரின் பெயர் பாக்யாநகர் என மாற்றப்படும் என அம்மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டி அறிவித்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
தெலுங்கானா மாநிலத்தின் 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர்
30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள். தெலுங்கானாவில் 2014,18 தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சி வென்று முதல்வராக கே.சந்திரசேகர ராவ் பதவி வகித்து வருகிறார்.

தற்போதைய தேர்தலில் பிஆர்எஸ் கட்சி, ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கும் என்கின்றன தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள். அதேநேரத்தில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என கனவு காண்கிறது ஆளும் பிஆர்எஸ் கட்சி. இந்த இரு கட்சிகளிடையே பாஜகவும் களத்தில் இருக்கிறது. தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் பிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்க முடியும் என்பதும் பாஜகவின் எதிர்பார்ப்பு.
தெலுங்கானாவில் இறுதி கட்ட பிரசாரங்கள் அனல் பறக்கின்றன. ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றன. இதில் பாஜகவின் வாக்குறுதிகள் பெரும் பிரளயத்தை கிளப்பி வருகின்றன. இஸ்லாமியர்களுக்கான 4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, உபி, அஸ்ஸாம் முதல்வர்களான யோகி ஆதித்யநாத், ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் ஏற்கனவே ஹைதராபாத் நகரை பாக்யாநகர் என பெயர் மாற்றுவோம் என்றனர். மெட்ராஸ் என்ற பெயர் சென்னையானது; கல்கத்தா- கொல்கத்தாவானது; பாம்பே என்ற பெயர் மும்பை என மாறியது. அப்படியானால் ஹைதராபாத் என்ற பெயர் பாக்யாநகர் என ஏன் மாறக் கூடாது. யாருங்க அந்த ஹைதர்? பாக்யாநகர் என்பதுதான் ஹைதராபாத்தின் பழைய பெயர். அந்த பெயரை நிஜாம் ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டனர். ஆகையால் தெலுங்கானாவில் நாங்கள் ஆட்சி அமைத்தால் ஹைதராபாத் நகரின் பெயரை மீண்டும் பாக்யாநகர் என மாற்றியே தீருவோம் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications