நடு ரோட்டில் செல்போன் கடைக்காரரை இழுத்துப்போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்த கும்பல்.. அதிர்ச்சி
ஹைதராபாத் ; சீட்டு கட்டிய பணத்தை கேட்டதால் செல்போன் கடைக்காரர் மீது சிட்பண்ட் ஊழியர்கள் பெட்ரோல் ஊற்றி பொளுத்திய சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிட்பண்ட் ஊழியர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் பெரும்பாலான பகுதி மக்களின் நம்பிக்கையாக சீட்டு போடுவது தொடர்கிறது. சீட்டு போட்டு சேகரிக்கப்படும் பணத்திற்கு வட்டி அதிகமாக கிடைப்பதால் நம்பிக்கையுடன் அதை மக்கள் தொடர்கிறார்கள்,
ஆனால் சீட்டு கம்பெனிகள் ஏமாற்றாமல் இல்லை. ஒரு லட்சம், 5லட்சம் , 10 லட்சம் என சீட்டு பிடித்துவிட்டு மொத்தமாக ஒரு நாள் ஊரை விட்டு ஓடுபவர்கள் நாடு முழுவதும் அதிகமாகவே உள்ளனர். ஆனாலும் நம்பிக்கையின் அடிப்படையில் நெருக்கமான அல்லது தெரிந்தவர்களிடம் சீட்டு போடுவது அல்லது பிரபலமான கம்பெனிகளில் சீட்டு போடுவதை மக்கள் இன்றும் தொடர்கிறார்கள்,

பணம் கேட்டார்
அப்படித்தான் தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டா டைலர் தெருவில் ராஜூ என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் அங்குள்ள தனியார் சிட்பண்டில் மாதச்சீட்டு செலுத்தி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சீட்டு எடுத்துள்ளார்.

வாக்குவாதம்
ஆனால் சிட்பண்ட் நிர்வாகம் பணத்தை தரவில்லையாம். பலமுறை சென்று கேட்டும் பணம் தராததால் விரக்தியடைந்த ராஜூ, நேற்றுமுன்தினம் சிட்பண்ட் அலுவலகத்திற்கு சென்று பணம் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

நடுரோட்டில் எரிப்பு
இதையடுத்து தனது கடைக்கு ராஜூ வந்துவிட்டார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராஜூவின் செல்போன் கடைக்கு வந்த சிட்பண்ட் ஊழியர்கள், அவரை கடைக்கு வெளியே இழுத்து வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

படுகாயம்
உடல் முழுவதும் பற்றிய தீயால் அலறிதுடித்த ராஜூவை அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இருப்பினும் அவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிட்பண்ட் ஊழியர்களை தேடி வருகின்றனர். ராஜூ நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு அவசியம்
சீட்டு போடும் முன்பு மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்ற நிறுவனமா என்பதை பார்க்க வேண்டும். வீட்டு பக்கத்தில் உள்ளவர்களிம் சீட்டு போடுவதாக இருந்தால் முற்றிலும் கவனமாக பார்க்க வேண்டும். அவர்களின் சொத்து மதிப்புகள் மற்றும் அவரின் நாணயம் உள்ளிட்டவற்றை பார்க்க வேண்டும். அவர் இதுவரை யாரையும் ஏமாற்றினாரா அல்லது கடன் அதிகம் வாங்கி வைத்துள்ளாரா என்பதை விசாரிப்பது நல்லது, ஒரு வேளை பிரச்சனை இல்லை , பாதுகாப்பானவர் என்று உணர்ந்தாலும் உண்மையில் ரிஸ்க் அதிகம் தான். எனவே சீட்டு விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது,
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications