ரூ100 கோடி பேரம்: கேசிஆர் எம்எல்ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க பாஜக முயற்சித்ததா? தெலுங்கானாவில் பரபர
ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாகவும் இதற்கான பேரத்தை நடத்தியவரை கைது செய்து இந்த குதிரை பேரத்தை முறியடித்து இருப்பதாகவும் தெலுங்கானா போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் ராஷ்டிர சமிதியின் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார்.
கடந்த 2019- ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததில் இருந்தே எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி தங்கள் ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாகவும்.. ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தை செயல்படுத்த பல கோடிகளை தயார் செய்து வைத்திருப்பதாகவும்.. சந்திரசேகர் ராவின் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால், இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்து வருகிறது.

சந்திரசேகர ராவ்
தற்போது தனது கட்சியை தேசிய கட்சியாக அறிவித்துள்ள சந்திரசேகர ராவ், கட்சியின் பெயரையும் பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றியுள்ளார். மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் தலைவர்களில் சந்திரசேகர ராவும் ஒருவர். இதற்காக தேசிய அளவில் தலைவர்களை சந்தித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமர் மோடியையும் மத்தியில் ஆளும் பாஜகவையும் கடுமையாக விமர்சிப்பதையும் கேசிஆர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

4 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க
இந்த நிலையில், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாகவும் இதற்கான பேரத்தை நடத்திய 3 பேரை கைது செய்து இந்த குதிரை பேரத்தை முறியடித்து இருப்பதாக தெலுங்கானா போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெலுங்கானா போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தெலுங்கானாவில் ஆளும் எம்.எல்.ஏக்கள் 4 பேரிடம் தலா ரூ. 50 கோடி பணம், அரசு காண்ட்ராக்ட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாகவும் கட்சி மாற வேண்டும் என்று டெல்லியை சேர்ந்த ஒருவர் பேரத்தில் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

தீவிர விசாரணை
ஆசிஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து ஆசை வார்த்தைகளை கூறி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க ஒருவர் முயற்சிப்பதாக எம்.எல்.ஏ ஒருவர் எங்களுக்கு தகவல் கொடுத்தார். இதன் அடிப்படையில் பண்ணை வீட்டில் சோதனை நடத்தி குறிப்பிட்ட நபரை பிடித்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போலி அடையாளங்களுடன் இந்த நபர் ஐதராபாத் வருகை தந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டில் பேரம்
அரியானைவைச் சேர்ந்த சாமியார் என்று தன்னை அடையாளப்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர். தந்தூர் தொகுதி எம்.எல்.ஏ பைலட் ரோகித் ரெட்டியின் பண்ணை வீட்டில் தான் இந்த பேரம் நடைபெற்றதாகவும் அவரே போலீசாரிடம் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ள போலீசார், நான்கு எம்.எல்.ஏக்களும் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பேரம் நடத்தப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மறுப்பு
கடந்த ஆகஸ்ட் மாதம் டி.ஆர்.எஸ் கட்சியின் 18 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையப் போவதாக அக்கட்சியின் தலைவர் ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் இத்தகைய குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள தெலுங்கானா பாஜக தலைவர்கள், முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற குதிரை பேர நாடகங்களை சந்திரசேகர் ராவ் நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
-
'கோஸ்ட் டெலிவரி..' சிலிண்டர்களை வைத்து ஏஜென்சிகள் ஆடும் கேம்.. கதறும் பொதுமக்கள் -
துபாய் போட்ட திடீர் உத்தரவு.. இந்தியர்களுக்கு தான் மோசமான பாதிப்பு.. இன்னும் 10 நாளே தானே இருக்கு! -
ஹார்முஸ் நீரிணை.. கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் US! டிரம்ப் போட்ட உத்தரவால் இந்தியாவுக்கு சிக்கல் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன்












Click it and Unblock the Notifications