பிரபல கல்லூரியில் ஆசிரியையை செருப்பால் அடித்த மாணவி.. செல்போனுக்காக செய்யும் அசிங்கத்தை பாருங்க
ஹைதராபாத்: ஆசிரியர்-மாணவர் உறவின் புனிதத்தையே கெடுக்கும் வகையில் ஒரு சம்பவம் ஆந்திராவில் நடந்திருப்பது வீடியோவால் அம்பலத்திற்கு வந்துள்ளது. தனது மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த ஒரு என்ஜினியரிங் மாணவி, தனது ஆசிரியையை (விரிவுரையாளரை) செருப்பால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் சமீபத்தில் விசாகப்பட்டினம்-விஜயநகரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரபல கல்லூரியில் நடந்துள்ளது.
ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையே இன்றை காலக்கட்டத்தில் சுமூகமான உறவுகள் இல்லை என்பது பலருக்கும் தெரியும்.பல இடங்களில் ஆசிரியர் மாணவர் இடையே சண்டைகள் அதிகமாக இருக்கிறது. மாணவிகள் சிலர் பிடிக்காத அல்லது கண்டிக்கும் ஆசிரியர் மீது தவறான அத்துமீறல் புகார் அளிப்பதும் நடக்கிறது. அதேபோல் சில ஆசிரியர்கள் அத்துமீறிய புகாரில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அதேபோல் செல்போன் எடுத்துவராதே, ஒழுங்காக படி, நன்றாக எழுது, நன்றாக முடிவெட்டிவிட்டு வா, காப்பி அடிக்காதே என்று விமர்சனம் செய்யும் ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம்- விஜயநகரம் தேசிய நெடுஞ்சாலையில் டகம்மாரி அருகே ரகு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாணவி ஒருவர் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் வகுப்பறையிலோ அல்லது கல்லூரி வளாகத்திலோ தனது மொபைல் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, ஒரு பெண் விரிவுரையாளர் அதைக் கவனித்து, கல்லூரி நிறுவன விதிகளின்படி, செல்போனை கைப்பற்றினார். இந்தச் செயலால் மாணவி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.
செல்போன் கொண்டு வந்த மாணவியை கண்டித்து செல்போனை ஆசிரியர் பிடுங்கி தன்னிடம் வைத்து கொண்டார். இதனால் கோபமடைந்த மாணவி செல்போனை திருப்பி தர சொல்லி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாணவி - ஆசிரியை இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த மாணவி, அந்த போனோட விலை ரூ.12,000... நீ எப்படி என் போனை எடுப்பாய்? என ஆசிரியையை மிகவும் வாய் கூசும் சொற்களால் திட்டியுள்ளார்.
రఘు కళాశాలలో టీచర్ విద్యార్థిని మధ్య వాగ్యుద్ధం.. టీచర్ మీద చేయి చేసుకున్న విద్యార్థిని.#RaghuEngineeringCollege #Vizianagaram #Vizag #AndhraPradesh #UANow pic.twitter.com/APzPn1isCK
— ఉత్తరాంధ్ర నౌ! (@UttarandhraNow) April 22, 2025
பின்னால் அந்த மாணவி தனது செருப்பைக் கழற்றி, மற்றவர்கள் முன்னிலையில் விரிவுரையாளரைத் தாக்கினார். இதனால் நிலைமை மோசமானது. இதை கண்ட சக மாணவிகள் ஓடி வந்தனர். மாணவியை உடனடியாக தடுத்து நிறுத்தி தாக்குதலை நிறுத்த முயன்றனர். அவர்கள் முயற்சி செய்த போதிலும், மாணவி விரிவுரையாளரை ஆத்திரம் தீர அடித்துக் கொண்டே இருந்தார்.
அங்கிருந்த மாணவி ஒருவர் இந்த முழு சம்பவத்தையும் தனது மொபைல் போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ ஆன்லைனில் வெளியாகி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலர் மாணவிக்கு டிசி கொடுத்து அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஒழுக்கமான நடத்தை இல்லாத மாணவியை கல்லூரியில் படிக்க விடக்கூடாது என்று குரல் எழுப்பி வருகிறார்கள்.ஆந்திரா முழுவதுமே அந்த மாணவியின் செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications