ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"எலும்பும் தோலுமாக".. ஒரே வீட்டிற்குள் 3 பெண்கள், 2 ஆண்கள்.. அதுவும் ஒன்றரை வருஷம்.. அலறிய ஆந்திரா

ஆந்திராவில் வீட்டிற்குள் அடைப்பட்டிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஒரு கொடுமையான சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், உட்பட 5 பேரை போலீசார் மீட்டுள்ளனர்.. எங்கிருந்து தெரியுமா? அவர்கள் வீட்டில் இருந்தே அவர்களை மீட்டுள்ளனர்.. அதுதான் இந்த செய்தி..!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கதலி என்ற கிராமம் உள்ளது.. இங்க வசித்து வந்தவர் ஜான் பென்னி.. இவருக்கு 50 வயதாகிறது.. மனைவி பெயர் ரூத்.. 2 மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

ஜான், சைக்கிள் ரிப்பேர் கடை வைத்துள்ளார்.. இந்நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம், இந்தியாவில் தொற்று வீரியத்தில் இருந்தது..

 பயம்

பயம்

அதிலும் கேரளாவில்தான் அதிக பாதிப்பு இருந்தது.. அப்போது ஜான் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒரு பெண், தொற்று பாதிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார்.. இந்த பெண் இறந்ததில் இருந்து, ஜான் மனைவி ரூத், மற்றும் 2 மகள்களும் ரொம்பவே பயந்துவிட்டனர். அதனால் வீட்டை விட்டு வெளியே வராமலேயே இருந்துள்ளனர்..

 மளிகை பொருட்கள்

மளிகை பொருட்கள்

எங்கேயாவது காய் வாங்க, மளிகை வாங்க போகணும் என்றாலும் ஜானும், அவரது மகன் பென்னியும்தான் போய் வருவார்களாம்.. அதுகூட எப்போவாவதுதான் போவார்கள்.. மொத்தமாக பொருட்களை வாங்கி கொண்டு வந்து, மறுபடியும் வீட்டுக்குள் அடைந்து கொள்வார்கள்.. ஆனால், அந்த 3 பெண்கள், அதுகூட இல்லை.. வாசற்படியில் வந்துகூட 3 பேரும் நிற்க மாட்டார்களாம்.. அக்கம்பக்கத்தினரும் பேசினாலும் தொற்று பரவிவிடும் என்று, யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர்..

 பஞ்சாயத்து ஊழியர்

பஞ்சாயத்து ஊழியர்

இப்படிப்பட்ட சூழலில்தான், முதல்மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஜானுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. இந்த தகவலை தெரிவிப்பதற்காக, பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் ஜான் வீட்டுக்கு சென்றார்.. ஆனால், அவரை வீட்டிற்குள்ளே சேர்க்கவில்லை.. அப்போதுதான் அங்கிருந்த 3 பெண்களின் நிலைமையை ஓரளவு யூகித்து அதிர்ந்து போனார்.. உடனடியாக போலீசுக்கு சென்று விஷயத்தை சொன்னார்..

அதிர்ச்சி

அதிர்ச்சி

போலீசாரும் ஜான் வீட்டிற்கு வந்தனர்.. கதவை உடைத்து கொண்டு உள்ளே போனது போலீஸ்.. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமாகவே வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் குடும்பத்தை பார்த்து மிரண்டனர்.. 5 பேரின் உடல்நலமும் பாதிக்கப்பட்டிருந்து தெரியவந்தது. 3 பெண்களும் உடல்மெலிந்து, அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டனர்.. அவர்களை மீட்ட போலீசார் கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து வந்து, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்..

 சிகிச்சை

சிகிச்சை

இவர்களை செக் செய்த டாக்டர்கள் அதற்கு மேல் ஷாக் ஆகிவிட்டனர்.. 3 பெண்களுக்குமே சூரிய ஒளி உடம்பில் படாத காரணத்தினால் வைட்டமின் -டி பிரச்சனை வந்துள்ளது.. மேலும் ஹீமோகுளோபினும் குறைந்து போயுள்ளது.. வெளிஉலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்ததால், மனநிலை பாதித்தது போலவும் குழப்ப நிலையில் இருக்கிறார்களாம்.. தொடர் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.

English summary
Fearing of covid virus, Andhra Women self isolate for 15 months
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X