கட்டிடத்துக்குள் 18 வயது பெண்ணை தூக்கி சென்ற 6 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்.. மீண்டும் ஒரு ஷாக்
பெண்ணை பலாத்காரம் செய்த 6 பேர் கைதாகி உள்ளனர்
ஹைதராபாத்: 18 வயது இளம்பெண்ணை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் தெலுங்கானாவை அதிர வைத்து வருகிறது.
தெலுங்கானாவில் நிஜாமாபாத்தில் வசித்து வந்துள்ளார் அந்த 18 வயது மாணவி.. தன்னை சந்திக்க வேண்டும் என்று இவரது நண்பர் சொன்னதால், அதை நம்பி மாணவியும் சென்றுள்ளார்..
அப்போது மாணவியும், அந்த நண்பரும் மது அருந்த முடிவு செய்துள்ளனர்.. நேரம் ஆக ஆக நிறைய மதுவை மாணவிக்கு ஊற்றி தந்துள்ளார் நண்பர்..

போதை
ஒருகட்டத்தில் மது அருந்தியதில் மாணவி போதையால் நிலைகுலைந்து விழுந்து விட்டார்... இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நண்பர், உடனே செல்போனில் தன்னுடைய 3 நண்பர்களை வரவழைத்துள்ளார்.. 4 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கட்டுமான வேலை நடைபெற்று வந்த ஒரு கட்டிடத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.. அங்கு சென்றபிறகு, மேலும் 2 நண்பர்களை போன் போட்டு அழைத்துள்ளனர்.

சிகிச்சை
மொத்தம் 6 பேராக சேர்ந்து அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்..நீண்ட நேரம் கழித்துதான் மாணவிக்கு சற்று போதை தெளிந்துள்ளது.. மயக்கம் தெளியவே நள்ளிரவு 2 மணி ஆகிவிட்டது.. அப்போதுதான் தன்னுடைய நிலைமையை உணரந்து கதறி அழுதுள்ளார். உடனே போலீசுக்கு 100-க்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார்.. போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்..

அதிர்ச்சி
தற்போது அவருக்கு தீவிரமான சிகிச்சை நடந்துவருகிறது.. அதேசமயம், மாணவியிடம் நடத்திய வாக்குமூலத்தை வைத்து சம்பந்தப்பட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்நாளுக்கு நாள் தெலுங்கானாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் 6 வயது சிறுமி, பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

கவலை
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று தலைவர்களும் ஆவேசமாக பேட்டிகளை தந்திருந்தனர்.. இதுதொடர்பான விசாரணை இன்னும் முழுமையாக நடந்து முடியவில்லை.. அதற்குள் இன்னொரு சம்பவம் இப்படி நடந்துள்ளதும், பெண்களுக்கு இதே நிலை தொடர்வதும் அம்மாநில மக்களை கவலை கொள்ள வைத்து வருகிறது...
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications