ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை.. போலீஸ் அதிரடி!
ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான 4 பேரும் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video
ஹைதராபாத்: ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான 4 பேரும் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
அந்த இடத்திலேயே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, அதன் பின் அந்த பெண்ணின் கொலை செய்து உள்ளனர். அதோடு பின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள்.

கைது செய்தனர்
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலையாளிகள் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
|
கொடுமை படுத்தினார்கள்
அந்த பெண்ணை மிகவும் மோசமாக கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர். அவரின் வாயில் மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, பின் தலையில் கல்லால் அடித்துள்ளனர். கடைசியாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து 27 கிமீ அவரின் உடலை லாரியில் வைத்து கொண்டு சென்று பின் எரித்துள்ளனர்.

விசாரணை
இந்த இலையில் கைது செய்யப்பட 4 பேரையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இவர்களை நடு ரோட்டில் ஓட விட்டு கொல்ல வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான 4 பேரும் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

என்கவுண்டர் எப்படி
குற்றம் நடந்த இடத்திற்கு 4 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு அழைத்துச் சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயற்சி செய்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி அவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் அறிவித்துள்ளது .
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications