சேர்த்து வைப்பதாக அழைத்த தாய் மாமன்கள்.. நடுவழியில் சுதாரித்த காதலி, சிக்கிய காதலன், நடந்த பயங்கரம்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் காதல் திருமணம் செய்த இளைஞரை கடத்தி ஆணவ கொலை செய்த பெண்ணின் தந்தை உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தின் சாந்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த அவந்தி (26) என்ற பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்.
இதனால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டின் பெற்றோரும் கடுமையாக எதிர்த்தார்கள். எனினும் பெற்றோரின் கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜூன் 11ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இருவர்கள், சங்காரெட்டி பகுதியில் உள்ள கோயிலில் பெற்றோருக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டார்கள்ள். அத்துடன் தங்கள் கல்யாணத்தை ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிவும் செய்தனர்.

காரில் அழைத்தனர்
பின்னர், ஹைதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்கள்.. இதையறிந்த பெண்ணின் தாய் மாமன் விஜய், கடந்த ஒரு வாரமாக அவந்தியை போனில் தொடர்பு கொண்டு பேசியருக்கிறார். நேற்று முன்தினம் அவந்தியின் பெற்றோருடன் சமாதானம் பேசி சேர்த்து வைப்பதாக ஏமாற்றி அழைத்து வந்த தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா ஆகியோர், தம்பதியை ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ரங்காரெட்டி மாவட்டத்திற்கு காரில் அழைத்துச் சென்றாரக்ள்.

தப்பிக்க முயற்சி
இதனிடையே தாய்மாமன்களின் நடவடிக்கைகளால் சந்தேகம் அடைந்த அவந்தி, காதல் கணவன் ஹேமந்துடன் ஓடும் காரில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது அவந்தியை அங்கேயே விட்டு விட்டு, ஹேமந்த்தை மட்டும் காரில் ஏற்றிச் சென்றார்கள். உடனே, சங்காரெட்டி போலீசாருக்கு அவந்தி புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹேமந்தை தீவிரமாக தேடினார்கள்.

மாமானார் கைது
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத் அருகே நகரம் பகுதியில் ஒரு முட்புதரில் ஹேமந்த் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது தொடர்பாக அவந்தியின் தந்தை லட்சுமணா, தாய் மாமன்கள் விஜய், யுகேந்திரா உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மகளை காதலித்து திருமணம் செய்த மருமகனை ஆவணக்கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணவ கொலை
2 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. ஹைதராபாத்தின் மிரியாளகூடாவை சேர்ந்த பிரனய் என்ற இளைஞரும், அமுர்த வர்ஷ்னி என்ற இளம்பெண்ணும் காதலித்து கல்யாணம் செய்தார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமுர்த வர்ஷினியின் தந்தை மாருதிராவ், மருமகனை நடுரோட்டில் கூலிப்படை வைத்து வெட்டிக்கொலை செய்தார். பின்னர் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications