கவனம் மக்களே.. திறந்து கிடந்த தண்ணீர் தொட்டி.. தவறி விழுந்த ஹைதராபாத் ஐடி ஊழியர் பரிதாபமாக பலி!
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள விடுதியில் அலட்சியமாகத் திறந்து வைக்கப்பட்ட நிலத்தடி நீர்த் தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நமது நாட்டில் பொதுமக்கள் பலரும் பாதுகாப்பு நடைமுறைகளில் அலட்சியம் காட்டுவார்கள். அப்படி மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகள், செப்டிக் டாங்குகள், சம்ப்களில் தவறி விழுந்து உயிரிழக்கும் சோக சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

ஷாக் விபத்து: ஒவ்வொரு ஆண்டும் இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் கூட, இதை யாரும் கவனமாகப் பின்பற்றுவதில்லை. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் நடந்துள்ளது. எந்தவொரு இடமாக இருந்தாலும் நிலத்தடி நீர்த்தொட்டியை மூடாமல் வைத்தால் எந்தளவுக்கு அது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதாக இந்தச் சம்பவம் இருக்கிறது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நிலத்தடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

உயிரிழப்பு: இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் ஷேக் அக்மல் சுஃபுயான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 25 வயதான அவர், அங்குள்ள ஐடி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அஞ்சயா நகரில் உள்ள தனது விடுதியில் இருந்த நிலத்தடி நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார்.
50 பேரின் உயிரை குடித்த ஆறு..எமனாக மாறிய படகு பயணம்.. பெரும் சோகத்தில் ஆப்பிரிகா
அந்த வீடியோவில், அக்மல் தனது விடுதியின் பிரதான வாயில் வழியாக உள்ளே வருவது தெளிவாகத் தெரிகிறது. பிரதான வாயில் அருகிலேயே இருந்த அந்த நிலத்தடி தண்ணீர் தொட்டி மூடப்படாமல் திறந்து இருந்தது. இதைக் கவனிக்காமல் அக்மல் வரவே எதிர்பாராத விதமாகத் தண்ணீர் தொட்டியில் விழுகிறார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க அங்கு வருகிறார்கள். அருகே இருந்த கயிறு உள்ளிட்டவற்றைப் போட்டு அவரை காப்பாற்ற முயல்கிறார்கள்.
வழக்குப்பதிவு: இருப்பினும் நிலத்தடி தண்ணீர் தொட்டியில் விழுந்ததில், அந்த நபருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விடுதியில் உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததற்காக விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவனம் மக்கள்: இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. எனவே, நீங்கள் தங்கி இருக்கும் இடத்தில், அது வீடாக இருந்தாலும் சரி, விடுதியாக இருந்தாலும் சரி, சம்ப் முறையாக மூடப்பட்டு இருப்பதை உறுதி செய்யுங்கள். திறந்து இருந்தால் உடனடியாக மூடச் சொல்லுங்கள். அது உங்கள் வேலை இல்லை என்றாலும் உங்கள் நடவடிக்கை மற்றொருவரைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications