43 பெண்கள், மர்ம விடுதிகள், போலி ஆவணங்கள்! பணத்திற்காக மருத்துவர்கள் செய்த வெறிச்செயல்! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை அழைத்து வந்து, சட்டவிரோதமாக கருமுட்டை தானம் செய்ய வைத்த கும்பல் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நமது நாட்டில் கருத்தரித்தல் தொடர்பான சிகிச்சை என்பது இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. நாடு முழுக்க பல்வேறு நகரங்களிலும் இது மிக பெரிய பிஸ்னஸாகவே மாறிவிட்டது என சொல்லலாம். இதனால் அதை சுற்றி மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

Illegal Egg Donation

மோசடி

அதாவது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களை அழைத்து வந்த கும்பல் ஒன்று, அவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக கருமுட்டை தானம் பெற்றுள்ளது. இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில் இதன் பின்னணியில் மிக பெரிய கும்பல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இது தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளனர்.

பெண்களை அழைத்து வந்த ஏஜெண்டுகள், கருத்தரிப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்ப வங்கிகளுக்கு இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கும்பல் பெண்களை எப்படி அழைத்து வந்தது, அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்தது எப்படி, கருமுட்டை எடுக்கும் மருத்துவ நடைமுறைகளை பரிந்துரைத்தது யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வழக்குப்பதிவு

ஹைதராபாத்தில் உள்ள பெகம்பேட் மற்றும் சரூர்நகர் பகுதிகளில் இந்த விவகாரம் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 43 பெண்கள் மீட்கப்பட்டனர். இதில் 31 பெண்கள் பெகம்பேட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பானவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களின் உடல்நிலை, கருமுட்டை தானம் செய்வதற்கான ஆவணங்கள் மற்றும் ஏற்கெனவே கருமுட்டை தானம் செய்துள்ளார்களா என்பது தொடர்பான பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கருமுட்டை எடுக்கும் நடைமுறை என்பது செயற்கை கருத்தரித்தல் அல்லது கருமுட்டைகளை உறைய வைத்து பாதுகாக்கும் சிகிச்சை போன்ற இனப்பெருக்க தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய அறுவை சிகிச்சையாகும். இதில் பெண்களின் கருப்பையில் இருந்து முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள் எடுத்து சேகரிக்கப்படும்.

கைது

இதில் தான் மோசடி நடந்திருக்கலாம் என்றும் போலி ஆவணங்கள் மூலம் ஒரே பெண்களிடம் தொடர்ச்சியாக கருமுட்டை எடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலி ஆதார் ஆவணங்களை தயாரித்ததாக பிரவீன் என்பவர் நவம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆவணங்கள் எப்படி தயாரிக்கப்பட்டன, யாருக்கு வழங்கப்பட்டன, கருமுட்டை தானம் தொடர்பான நடவடிக்கைகளில் அவை பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவில் விதிகள்

இந்தியாவில் கருமுட்டை எடுக்கும் நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு விதிகள் உள்ளன. கருமுட்டை தானம் செய்பவர் 23 முதல் 35 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்ணாக இருக்க வேண்டும். அவருக்கு குறைந்தபட்சம் 3 வயதுக்கு மேற்பட்ட ஒரு குழந்தை இருக்க வேண்டும். ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே கருமுட்டை தானம் செய்ய முடியும். மேலும், ஒரு சுழற்சியில் அதிகபட்சமாக 7 கருமுட்டைகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. மேலும், கருமுட்டைகளை பணத்திற்காக விற்பதோ அல்லது வாங்குவதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்தளவுக்கு கடுமையான விதிகள் இருந்தாலும் கூட போலி ஆவணங்கள் மூலம் பெண்களிடம் இருந்து திரும்ப திரும்ப கருமுட்டைகள் எடுக்கப்பட்டு, அவை விற்கப்பட்டன என்பது குறித்தே விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக 14 கருத்தரிப்பு மருத்துவமனைகள், IVF மையங்கள் மற்றும் ART வங்கிகளுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+