பள்ளி ரீயூனியனால் கள்ளக்காதல்.. தயிர் சோற்றில் விஷம் வைத்த ரஜிதா! மிஸ்ஸான கணவன்..3 குழந்தைகள் போச்சே
ஹைதராபாத்: பள்ளியில் நடந்த முன்னாள் மாணவர் சந்திப்பில் பள்ளிக்கால தோழனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் குடும்பத்தினருக்கே தயிர் சாதத்தில் விஷத்தை வைத்து கொலை செய்ய முயன்றிருக்கிறார் தெலுங்கானாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர். தயிர் சாதம் பிடிக்காததால் கணவன் தப்பித்துக் கொள்ள, விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்ட மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படம் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. பலரும் தங்கள் பள்ளிக் கால காதலை நினைத்து உருகியது தனிக்கதை. அதற்குப் பிறகு ரீயூனியன் என்ற பெயரில் சில பல பிரச்சனைகள் நடந்ததும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

ஆனால் பள்ளி ரீ யூனியனில் ஆரம்பித்த கள்ளக்காதல் கொலை சம்பவத்தில் முடிவடைந்திருப்பது தான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி. தெலுங்கானா மாநிலத்தில் சங்கரட்டி அருகே அமுல்புர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜிதா. 35 வயதான இவர் முதல் மனைவியை இழந்த சென்னையா என்பவரை இரண்டாவது தாரமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே 20 வயது வித்தியாசம் எனவும் சொல்லப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னால் இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். தற்போது வயது முதிர்வு காரணமாக சென்னையா ரஜிதாவுடன் தாம்பத்திய வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் படித்த பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் ரியூனியன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தகவலை கேட்டு ரஜிதா அங்கு சென்று இருக்கிறார்.
நாள் முழுவதும் தனது தோழர் தோழிகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்த அவர் தன்னுடன் படித்த சிவக்குமார் என்பவரை சந்தித்து பேசி இருக்கிறார். 96 படத்தில் வருவது போல அன்று முழுவதும் ரஜிதாவும் சிவகுமாரும் பல இடங்களில் சுற்றித்திரிந்து இருக்கின்றனர். தொடர்ந்து இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசியதோடு பைக்கில் ஊர் சுற்றி இருக்கிறார்கள். தொடர்ந்து தனியார் விடுதிகளில் அறை எடுத்து திருமணத்தை கடந்த உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் வயதான கணவரால் தனது வாழ்வில் பிரச்சனை இருப்பதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ரஜிதா சிவகுமாரை வற்புறுத்தி இருக்கிறார். மூன்று குழந்தைகள் கணவன் இருக்கும் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எல்லோரையும் விட்டுவிட்டு வா உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என சிவக்குமார் சொல்லி இருக்கிறார். இதை அடுத்து அந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார் ரஜிதா.
இரண்டாம் தாரமாக 50 வயதான நபருடன் வாழ்வதைவிட சிவக்குமாருடன் வாழலாம் என முடிவெடுத்த அவர் தனது குழந்தைகளையும் கணவனையும் கொலை செய்ய கொடூர திட்டம் தீட்டி இருக்கிறார். கடந்த 27ஆம் தேதி தயிர் சாதத்தில் விஷத்தை கலந்து தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் கொடுத்திருக்கிறார் மேலும் கணவர் செமையாக்கும் தயிர் சாதத்தை கொடுத்தார். ஆனால் எனக்கு தயிர் சாதம் பிடிக்காது என சென்னையா சாப்பிடாமல் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஆசை ஆசையாக தயிர் சாதத்தை சாப்பிட்ட மூன்று குழந்தைகளும் கடும் வயிற்று வலியால் வாந்தி எடுத்துள்ளனர். மயங்கிய குழந்தைகளை கண்டு அதிர்ந்து போன சென்னையா பதறிப் போய் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். தனக்கும் வயிற்று வலி வந்துள்ளது என ரஜிதா கூற அதே மருத்துவமனையில் ரஜிதாவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சிறிது நேரத்தில் குழந்தைகள் இறந்த நிலையில் ரஜிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறி இருக்கின்றனர். தொடர்ந்து ரஜிதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட அவரது செல்போனை ஆய்வு செய்து இருக்கிறார் சென்னையா. அப்போது அதில் சிவக்குமாருடன் தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ரஜிதாவை கைது செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் தான் கள்ளக்காதலால் தனது குழந்தைகளுக்கு தயிர் சாதத்தில் விஷத்தை கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து ரஞ்சிதா நீதிமன்றத்தில் அடைக்கப்பட்ட நிலையில் கள்ளக்காதலால் தனது குழந்தைகள் கொல்லப்பட்டது எண்ணி சென்னையா கதறி அழுதது காண்போரை கதி கலங்க வைத்தது.
-
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது!












Click it and Unblock the Notifications