இதென்ன சோதனை.. ஹோட்டலில் சர்வர் வேலை செய்யும் "சந்திரபாபு நாயுடு".. வைரலாகும் வீடியோ!
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை போல் தோற்றம் கொண்ட ஒருவர் ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவரை ஒரு படத்துக்காக இயக்குநர் ராம் கோபால் வர்மா தேடி வருகிறார்.
ஆந்திர மறைந்த முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ராம் கோபால் வர்மா இருக்கிறார். என்டிஆரின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக திகழ்ந்தவர் அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு.
[சலித்து போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த தந்தை.. மறுத்த தாய் மர்ம மரணம்.. நடந்தது என்ன]

திரைப்படம்
இவரது கதாபாத்திரத்துக்கு ஆளை தேடி கொண்டிருந்தார். அப்போது அவரை போன்றே அச்சு அசலாக இருக்கும் ஒருவரது வீடியோ வைரலாகியது. இரண்டு பாகங்களாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது.
|
வாழ்க்கையை மையப்படுத்தி
முதலில் இந்த படத்தை ராம் கோபால் வர்மா இயக்குவதாக இருந்தது. திரைக்கதையில் பாலகிருஷ்ணா திருப்தி அடையாததால் படத்தை இயக்கும் வாய்ப்பு கிரிஷுக்கு அளிக்கப்பட்டது. எனினும் என்.டி.ஆரின் முதல் மனைவியான லட்சுமியின் வாழ்க்கையை மையப்படுத்தி கதை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
|
டுவிட்டரில் தேடல்
அதற்குத்தான் சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்துக்கு ஆளை தேடி வந்தார். இந்நிலையில் அவரை போன்று தோற்றம் கொண்டவரை பார்த்ததால் இந்த நபர் இருக்கும் இடத்தை தனக்கு தெரியப்படுத்தினால் ரூ.1 லட்சம் பரிசு என்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த ராம் கோபால் வர்மா தனது ஈமெயில் முகவரியையும் கொடுத்துள்ளார்.

2-ஆவது மகளை திருமணம்
காங்கிரஸ் கட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு அமைச்சராக இருந்த போது என்டிஆருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரது இரண்டாவது மகளை திருமணம் செய்து கொண்டார். கடந்த 1982-ஆம் ஆண்டு தேர்தலில் என்டிஆரின் தெலுங்கு தேச கட்சி வேட்பாளரிடம் சந்திரபாபு தோல்வி அடைந்தார். தற்போது அதே கட்சியின் தலைவராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications