ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா சார்பாக மாறுகிறதா புதிய இந்தியா? ராமானுஜர் சிலை தொடர்பாக மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

Google Oneindia Tamil News

ஐதராபாத்: ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜரின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல்காந்தி, புதிய இந்தியா சீனாவை சார்ந்ததாக மாறுகிறதோ என பிரதமர் நரேந்திரமோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Ramanujar statue: New india is china nirbar? Rahul raised question against PM Modi

தீண்டாமைக்கு எதிராக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் வைஷ் குரு ராமானுஜர். நாட்டில் சமத்துவத்தை பரப்பினார். இவரது 1000 ஆவது ஜெயந்தியையொட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் முச்சிந்தல் அருகே திரிதண்டியில் ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரமத்தில் பிரமாண்ட சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆசிரம வளாகத்தில் 40 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. ரூ.1000 கோடி செலவில் ஐம்பொன்னால் ஆன 216 அடி உயர ராமானுஜர் சிலை நிறுவப்பட்டது. சமத்துவத்துக்கான இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Ramanujar statue: New india is china nirbar? Rahul raised question against PM Modi

இந்நிலையில் ராமானுஜரின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் தற்போது வெளியாகின. இதை ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதாவது சிறு, குறு, தொழில்களை ஊக்கப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் மத்திய அரசின் ஆத்மநிர்பார் எனும் திட்டத்தையும், சிலையையும் ஒப்பிட்டு ராகுல்காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    China-வுக்கும் Modi திறந்த Ramanujar Silai-க்கும் என்ன தொடர்பு? | Oneindia Tamil

    கொழுந்தனோடு கள்ளக்காதல்.. தங்கையையும் 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா! ஷாக்கில் கர்நாடகாகொழுந்தனோடு கள்ளக்காதல்.. தங்கையையும் 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா! ஷாக்கில் கர்நாடகா

    அவரது டுவிட்டர் பதிவில், ‛சமத்துவத்துக்கான சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய இந்தியா சீனா நிர்பார்(சீனா தயாரிப்பு) என மாறிவிட்டதோ' என கேள்வி எழுப்பியுள்ளார்.இதன்மூலம் சுயசார்பு இந்தியா திட்டமான ஆத்மநிர்பார் குறித்து அடிக்கடி பேசி வரும் பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Former Congress president Rahul Gandhi has criticized the central government for turning the new India into a Chinese product, as the statue of Ramanujar in Hyderabad was made in China.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X