Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்ட்டியில் புழங்கிய போதைப் பொருள்? மறுப்பு தெரிவித்து நடிகை போட்ட வீடியோ!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவையும் போதைப் பொருளையும் பிரிக்க முடியாது என்பது போல் ஆகிவிட்டது. கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவிலான போதை பொருள் நெட்வொர்க் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரபல பாடகி ஒருவர் நடத்திய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதை பொருட்கள், வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. ஆனால் அந்த புகாரை மறுத்துள்ளார் அந்த பாடகி.

சினிமா துறையில் பார்ட்டி என்பது சாதாரணமாகிவிட்டது அதே நேரத்தில் பாலிவுட், டோலிவுட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மிகப்பெரிய நட்சத்திர விடுதிகள், ரிசார்டுகளில் நடக்கும் பார்ட்டிகளில் அதிக அளவு போதை பொருள் புழக்கம் இருப்பதாக தொடர் புகார்கள் வருகின்றன.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு திரையுலகம் போதை பொருள் பிரச்சனையில் சிக்கி வருகிறது. பாலிவுட்டில் பிரபலமான ஷாருக்கானின் மகன் போதை பொருள் வழக்கில் சிக்கினார். அதற்கு பிறகு தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராக வளம் வந்த கேபி சவுத்ரி போதை பொருள் வழக்கில் சிக்கினார்.

Telugu cinema Drug

போதைப் பொருள்

மேலும் அவர் தெலுங்கில் பிரபலமாக இருந்த பல நடிகர் நடிகைகளுக்கு போதை பொருள் சப்ளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதில் பல முன்னணி நடிகர் நடிகைகள் சிக்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் மீண்டும் போதைப்பொருள் சர்ச்சை வெடித்துள்ளது. பிரபல பாடகி ஒருவர் போதைப்பொருள் பாட்டி வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

தெலுங்கு சினிமா

தெலுங்கு திரைத்துறையில் பிரபல பாடகியாக வளம் வருபவர் மங்லி. சமீபத்தில் மங்லி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பிரபலமான ரிசார்ட் ஒன்றில் அந்த பார்ட்டி நடந்ததாக சொல்லப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே அங்கு போதை பொருள் புழக்கம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் அதிரடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர்.

பாடகி மங்லி

அதில் வெளிநாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட போதை பொருட்கள், கஞ்சா, வெளிநாட்டு மதுபானங்கள் ஆகியவை கைது பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பார்ட்டியில் கலந்து கொண்டு போதை பொருட்களை பயன்படுத்தியவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பாடகி மங்லி போதை பொருள் பயன்படுத்தினாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த நாள் பார்ட்டி

அவரது ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், பிறந்தநாள் பார்ட்டியில் போதை பொருட்கள் வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்படவில்லை எனவும், தன்னை குறித்து வெளியாகும் தகவல்கள் தவறானது என பாடகி மங்லி வீடியோ வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு மதுபானங்கள்

எனது பிறந்தநாள் பார்ட்டியில் வழக்கமான கொண்டாட்டங்கள் தான் இருந்தது. ஒரு சிலர் மது அருந்தி இருக்கலாம். ஆனால் போதை பொருட்கள் வெளிநாட்டு மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. என கூறியுள்ளார் மேலும், அந்த நிகழ்வில் தனது குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டிருந்ததாகவும், தாய், சகோதரர்கள் உள்ளிட்டவர்கள் தான் இருந்தார்கள். அதற்கு அனுமதி பெற வேண்டும் என எனக்கு தெரியாது எனக் கூறி இருக்கிறார்.

பஹீரா

மேலும், பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதாக வெளியே வெளியான தகவலையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவர் தமிழில் வெளியான பஹீரா படத்தில் சைக்கோ ராஜா என்ற பாடலை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. போதை பொருள் வழக்கில் பிரபல பாடகி சிக்கி இருப்பது தெலுங்கு திரை உலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+