ஓர் ஆண்டாக பூட்டி வைக்கப்பட்ட கடையில் எலும்புக்கூடு... ஹைதரபாத்தில் பரபரப்பு
ஹைதராபாத்: ஓர் ஆண்டாகப் பூட்டி வைக்கப்பட்ட கடை ஒன்றில் மனித மண்டை ஓடும், எலும்புக்கூடும் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா தலைவர் ஹைதராபாத்திலுள்ள வழிபாட்டுத் தளம் ஒன்றுக்குச் சொந்தமான கடையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பர்னிச்சர் கடை அப்பகுதியுள்ள ஒருவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. ஆனால், அந்த உரிமையாளர் கடந்த ஓர் ஆண்டாகக் கடையைப் பூட்டியே வைத்துள்ளார். மேலும், வாடகையையும் முறையாகச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த வழிபாட்டுத் தளத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், கடையை சுத்தம் செய்து, வேறொரு நபருக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சுத்தம் செய்யக் கடையை திறந்தபோது, அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
சுத்தம் செய்ய கடையை திறந்து உள்ளே சென்றபோது, ஒரு மரப்பெட்டியில் மனித மண்டை ஓடும், சில எலும்பு துண்டுகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஹைதராபாத் காவல் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தற்போது கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications