நடிகர் நரேஷின் ரூ 1500 கோடி சொத்தை அபகரிக்க பவித்ரா லோகேஷ் மாஸ்டர் பிளான்.. முதல் கணவர் பகீர்
நடிகை பவித்ரா லோகேஷ் எப்போதும் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார். அவர் அதற்காக எதையும் செய்வார்- முதல் கணவர் பேட்டி
ஹைதராபாத்: நடிகர் நரேஷை திருமணம் செய்து கொண்ட பவித்ரா லோகேஷ் ஆடம்பர வாழ்க்கைக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என அவருடைய முதல் கணவர் பேட்டி அளித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் பிரபல நடிகர் மைசூர் லோகேஷின் மகளாவார். பவித்ரா தனது 16ஆவது வயதில் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். சில படங்களில் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடித்துள்ளார். 9 ஆம் வகுப்பு படிக்கும் போதே தனது தந்தையை இழந்த பவித்ரா குடும்ப வறுமை காரணமாக சினிமாவில் நடிக்க வந்தார்.

சாப்ட்வேர் என்ஜீனியர்
இவர் சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிகர் சுச்சேந்திர பிரசாத்துடன் மலர்ந்த காதலால் சாப்ட்வேர் என்ஜீனியரை விவாகரத்து செய்தார். பிரசாத்தை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் 2018 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தார் பவித்ரா. 2021 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நரேஷுடன் காதல் கொண்டார்.

நரேஷ் பாபு
தெலுங்கு நடிகர் நரேஷ் பாபுவுக்கு ஏற்கெனவே 3 முறை திருமணமாகிவட்டது. எனினும் அவர் பவித்ராவை தற்போது 4ஆவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்திற்கு முன்னர் மைசூரில் ஒரு ஹோட்டலில் பவித்ராவுடன் நரேஷ் தங்கியிருந்த நிலையில் அவர்களை 3ஆவது மனைவி ரம்யா ரகுபதி கையும் களவுமாக பிடித்தார். எனினும் அறையை விட்டு வெளியே வந்த போது விசில் அடித்து ரம்யாவை வெறுப்பேறறினார். ஆத்திரமடைந்த ரம்யா, நரேனை செருப்பால் அடிக்க பாய்ந்தார்.

ரம்யா கோபம்
போலீஸார் ரம்யாவை தடுத்தனர். என்ன நடந்தாலும் பவித்ராவை திருமணம் செய்து கொள்வேன் என சவால் விட்டிருந்தார் நரேஷ். கடந்த புத்தாண்டு அன்று இருவரும் இந்த ஆண்டில் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என கூறியிருந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த நாளே துபாய்க்கு ஹனிமூனுக்கு சென்றனர்.

சுச்சேந்திர பிரசாத்
இந்த நிலையில் பவித்ராவின் முதல் கணவர் சுச்சேந்திர பிரசாத் தனது மவுனத்தை கலைத்து பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார். அந்த வாழ்க்கைக்காக அவர் எதையும் செய்வார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. நரேஷின் விஷயத்தில் வித்தியாசமான பிளான் போட்டுள்ளார். நரேஷின் ரூ 1500 கோடி சொத்தை அபகரிக்க நடிகர் நரேஷுடன் திருமணம் என்ற நாடகத்தை நடத்தியுள்ளார்.

விவாகரத்து செய்தது ஏன்?
பணத்துக்காக என்னை விவாகரத்து செய்தார் பவித்ரா. நரேஷுக்கு இது இன்னும் புரியவில்லை. என்றாவது ஒரு நாள் தெரிந்து கொள்வார் என சுச்சேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். 3ஆவது மனைவி ரம்யாவை நரேஷ் சட்டபடி விவாகரத்து செய்யவில்லை. அவரிடம் விவாகரத்து கேட்ட போது அவர் சம்மதிக்கவில்லை. இதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை என கருதிய நரேஷ், பவித்ராவை திருமணம் செய்து கொண்டார் என்கிறார்கள். 60 வயதில் நரேஷுக்கு 4ஆவது திருமணம் தேவையா என ரசிகர்கள் முகம் சுளிக்கிறார்கள். மேலும் திருமணம் முடிந்த அடுத்த நாளே ஹனிமூனுக்கு பறந்தது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பவித்ராவின் கணவர் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications