"அண்ணாமலை சிங்கமலைதான்.." தெலுங்கானாவில் விண்ணை பிளந்த கோஷம்.. பாஜகவினர் உற்சாகம்
ஹைதராபாத்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிங்கமலை என தெலுங்கானாவில் கோஷம் விண்ணை பிளந்தது.
தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. இந்த நிலையில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் பிரஜா சங்கரம யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. அதற்கு எதிராக சஞ்சய் குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த யாத்திரையில் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

யாத்திரை
இந்த நிலையில் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் நேற்று முன் தினம் நடந்த 8ஆவது நாள் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். கட்வால் நகரில் பொதுக் கூட்டத்திலும் பேசினார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். கூட்டத்தில் பேசிய பண்டி சஞ்சய் குமார், அநீதிக்கு எதிரான போராட்டத்தில் எங்களை நேரில் வந்து உற்சாகப்படுத்திய அண்ணாமலைக்கு நன்றி.

சிங்கமலை
அவர் உண்மையிலேயே சிங்கமலை தான் என்று பாராட்டினார். உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் சிங்கமலை என கோஷமிட்டனர். அண்ணாமலைக்கு தெலுங்கானாவில் கிடைத்த தனி மரியாதை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதே போல தமிழ்ப் புத்தாண்டையொட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடந்த தமிழ் சங்க நிகழ்ச்சியில் அண்ணாமலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொழிலதிபர்கள்
அது போல் தமிழ் தொழிலதிபர்கள் கூட்டத்திலும் அண்ணாமலைக்கு வரவேற்பு கிடைத்தது. இதுகுறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது திமுகவினர் அண்ணாமலையை விமர்சித்து வருவதால் அவருக்கு தேசிய அளவில் செல்வாக்கானது கூடி கொண்டே வருகிறது.

தமிழகத்து சிங்கம்
அதே போல் தெலுங்கானாவில் பண்டி சஞ்சய் குமார் சிங்கம் என அழைக்கப்படுகிறார். இதுகுறித்து பாஜக இளைஞரணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தமிழகத்து சிங்கம் அண்ணாமலையுடன் தெலுங்கானா சிங்கம். 2024 ஆம் ஆண்டு தென்னிந்தியாவை பாஜக ஆளும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications