வினாத்தாள் லீக்: தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் அதிரடி கைது- மோடி வருகையின் போது பரபர!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தேர்வும் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
தெலுங்கானா 10-ம் வகுப்பு தெலுங்கு மொழித் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அரசு பள்ளி ஒன்றின் தேர்வறை கண்காணிப்பாளர், வினாத்தாளை செல்போனில் படம் பிடித்து மற்றொரு அரசு பள்ளி ஆசிரியருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார். இப்படி தெலுங்கு மொழி வினாத்தாள் லீக் ஆன விவகாரம் ஊடகங்களிலும் அம்பலமானது. இதனையடுத்து தெலுங்கானா மாநில அரசு தேர்வறை கண்காணிப்பாளர் உட்பட 4 அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

ஆனாலும் தெலுங்கானா கல்வி அமைச்சர்ப் பதவி விலகித்தான் ஆக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு இந்தி தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே லீக் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 10-ம் வகுப்பு இந்தி வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் கமலாபூர் தேர்வு மையத்தில் இருந்து பாஜகவின் பிரசாந்த் என்பவர் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை லீக் செய்தது தெரியவந்தது.
பாஜக நிர்வாகி பிரசாந்த், மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய்க்கு வாட்ஸ் அப்பில் இந்த வினாத்தாளை அனுப்பி இருக்கிறார். இது தொடர்பாக பிரசாந்துடன் பண்டி சஞ்சய் பேசியதாகவும் போலீசார் விசாரணயில் தெரியவந்தது. இதனையடுத்து தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய், 10-ம் வகுப்பு வினாத்தாள் லீக் விவகாரத்தில் அதிரடியாக கைது செய்யபப்ட்டார். மாநில பாஜக தலைவர் ஒருவர் வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் புயலை கிளப்பி உள்ளது.

ஏனெனில் பிரதமர் மோடி வரும் 8-ந் தேதி தெலுங்கானா மாநிலம் வருகை தர உள்ளார். செகந்திராபாத்- திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். அத்துடன் ரூ10,000 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர், வினாத்தாள் லீக் அவுட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் பண்டி சஞ்சய் போலீசாரால் கைது செய்யப்படும் வீடியோவை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனை பண்டி சஞ்சய் தமது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
Fear is real in BRS.!
— Bandi Sanjay Kumar (@bandisanjay_bjp) April 4, 2023
First they stop me from conducting press meet & now arrest me late in night.
My only mistake is to Question BRS govt on its wrong doings.
Do not stop questioning BRS even if I am jailed.
Jai Sri Ram !
Bharat Mata ki Jai !
Jai Telangana ! ✊🏻 pic.twitter.com/hzdHtwVIoR
பண்டி சஞ்சய் தமது ட்விட்டர் பக்கத்தில், தெலுங்கானாவில் ஆளும் பிஆர்.எஸ். அரசாங்கத்தை கேள்வி கேட்டதாலேயே தம் மீது நடவடிக்கை பாய்கிறது என குற்றம் சாட்டி உள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
கள்ளக்காதல் + 2 கோடி காப்பீடு.. கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா.. மனைவியின் மாஸ்டர் பிளான் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications