Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் திருமணம் செய்யும் பெண்களே.. என் வாழ்க்கை பாடம்.. இப்படிக்கு பத்மா

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: காதல் திருமணம் செய்யும் பெண்கள் நிச்சயம் கவனிக்க வேண்டிய ஒரு அழுத்தமான சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. வேலைக்கே சரிவர செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றும் இளைஞனை காதலிக்கும் பெண்கள் வாழ்வில் சொல்ல முடியாத ஏமாற்றத்தை சந்திக்கிறார்கள். நம்பி வந்தவன் சரியில்லை என்றால், பெற்றோர்கள் கைவிட்டால், அந்த பெண்ணிண் வாழ்க்கை கற்பனை செய்யக்கூட முடியாத நிலை ஏற்படும். அப்படியான நிலையில் இளம் பெண் ஒருவர் எடுத்த தவறான முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் திருமணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக இந்த கட்டுரையை வாசித்து பாருங்கள். ஏனெனில் கல்லூரியில் படிக்கும் போது ஹீரோவாக தெரியும் காதலன், கல்யாணத்திற்கு பிறகு வில்லனாகிவிடுகிறான். சரியான காதலனை தேர்வு செய்தாலே இன்றைக்கு பெற்றோர் உதவி இல்லை என்றால் பெரிய சிக்கல் ஏற்படும். ஆனால் பெற்றோர் உதவி செய்யாமல், கணவனும் சரியில்லை என்றால், அந்த வாழ்க்கை உண்மையில் சாபமாக மாறிவிடும்.

The life of Padma a woman who had a love marriage in Andhra Pradesh is a lesson for many

மனம் விட்டு பேசுங்கள்

எனினும் அப்படியான சூழலில் முட்டாள்தனமாக முடிவெடுத்து வாழ்க்கையை முடிக்கக்கூடாது. உதவி செய்ய உலகமே இருக்கிறது. அரசிடம் நிலைமையை கூறலாம். பெற்றோரிடம் மனம் விட்டு பேசலாம். தவறான கணவனை தேர்வு செய்தவர்கள். மாற்றுவழிகளை தேர்வு செய்யலாம். அதனை விட்டு விட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்வது போன்ற முட்டாள்தனங்களை செய்யவே கூடாது.

காதல் திருமணம்

ஆந்திர மாநிலம் புத்தூர் மண்டலம் நேசனூரைச் சேர்ந்த 28 வயதாகும் கண்ணப்பரெட்டி மகள் பத்மா என்பவர் கல்லூரியில் படித்து வந்தார். பத்மா தன்னுடன் கல்லூரியில் படித்த சிவசங்கரை காதலித்து வந்தார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி 2019-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தேஜா (6), லாஸ்யா (5) என்று 2 மகள்கள் இருந்தார்கள்.

வேலைக்கே செல்லாத கணவன்

சிவசங்கர் திருமணம் ஆனதில் இருந்தே சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தாராம். புத்தூரில் வசித்து வந்த சிவசங்கர் தற்போது வரை சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாகச் சுற்றி வந்தாராம். செலவுக்குப் பல இடங்களில் கடன் வாங்கி வந்தாராம். இதனால் பத்மா, குடும்பச் செலவுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவதிப்பட்டு வந்துள்ளார். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு வளர்க்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கணவன் மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

பெரியவர்கள் சமாதானம்

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஊர் பெரியவர்கள் முன்னிலையில் குடும்பப் பிரச்சினையை பேசியிருக்கிறார்கள் அப்போது சிவசங்கரை ஊர் பெரியவர்கள் கடுமையாக கண்டித்தனர். அதற்கு சிவசங்கர், "இனி நான் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்கிறேன். எனக்கு ஸ்ரீ சிட்டியில் வேலை கிடைத்திருக்கிறது. நான் சம்பாதித்து மெல்ல மெல்ல கடனை அடைத்து விடுகிறேன்" என்று பெரியவர்கள் முன்னிலையில் உறுதி கொடுத்தாராம்.

மகளிர் குழு கடன்

இதற்கிடையே பத்மா, மகளிர் குழுவில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.. "நீ கடன் கட்டாததால் நாங்கள் வங்கியில் கடன் வாங்க முடியவில்லை" என்று மற்ற குழு உறுப்பினர்கள் திட்டி அசிங்கப்படுத்தி உள்ளார்கள்.. கடனை அடைக்க கணவரும் பணம் தராததால் பத்மா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினாராம்.

பத்மா எடுத்த முடிவு

இந்த நிலையில் பத்மா, சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளையும் தூக்கு மாட்டித் தொங்கவிட்டிருக்கிறார்.. இதில் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. பின்னர் பத்மாவும் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். அன்று மாலையில் வீட்டுக்கு வந்த சிவசங்கர், கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்துள்ளார். அப்போது குழந்தைகளும், பத்மாவும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

காதல் திருமணம் வேண்டாம்

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இறந்த தாய் மற்றும் குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் பத்மா எழுதிய கடிதம் சிக்கியிருந்தது. அதில், "பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் தாங்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் எனது வாழ்க்கை ஒரு பாடம். சிவசங்கர் உன்னைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பாவத்திற்கு நான் பட்ட கஷ்டங்களுக்கு அளவே இல்லை. என் குழந்தைகளும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். அதனால் நான் விடைபெறுகிறேன்" என்று கூறி உள்ளார்.

தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்

Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).

மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).

ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.

AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+