16 வயசு..தெலுங்கானாவை உலுக்கிய பென்ஸ் கார் பலாத்காரம்! வசமாய் சிக்கிய ஓவைசி கட்சி எம்எல்ஏவின் மகன்!
ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பென்ஸ் காருக்குள் வைத்து பள்ளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வின் மகனும் குற்றம் சாட்டப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மே 28 அன்று ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பார்ட்டி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது சிறுமி, ஐந்து இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தெலுங்கனாவில் ஆளும் முதல்வர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பிரமுகர்களின் வாரிசுகள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை தப்பிக்க வைக்க காவல்துறையினர் முயல்வதாக பகீர் புகார் கிளம்பியது.

தெலுங்கானாவில் அதிர்ச்சி
தெலுங்கானாவில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஒருவர் மட்டும் வயது இளைஞர் என்பதும், மற்ற ஐந்து பேரும் சிறார்கள் எனபதும் இப்போது அவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர். முதல் ஐந்து பேர் மீது கூட்டுப் பலாத்காரம், கடத்தல், காயப்படுத்துதல் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு மரண தண்டனை அல்லது 20 ஆண்டுகள் சிறை அல்லது வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஓவைசி கட்சி
ஆறாவது குற்றவாளியின் மீது சிறுமியை தானாக முன்வந்து காயப்படுத்தியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளம் நாங்கள் குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம், எனவே இந்த கொடூரமான குற்றத்திற்காக அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சிவி ஆனந்த் கூறினார். இந்நிலையில் கடந்த வாரம் பாஜக எம்எல்ஏ ரகுநந்தன் ராவ் பாதிக்கப்பட்ட இளம்பெண் மற்றும் அவரை பாலியல் செய்தவர்களின் வீடியோ கிளிப் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டார்.

எம்எல்ஏவின் மகன்
இதில் ஓவைசி கட்சியின் எம்எல்ஏவின் மகனும் காரில் இருந்ததாக குற்றம் சாட்டினார். மேலும் அவரது குற்றத்தை போலீசார் மூடிமறைக்கும் பணியில் ஈடுபட்டதாக கூறி இருந்தார். ஆரம்பத்தில், சட்டமன்ற உறுப்பினரின் மகன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடவில்லை என்று போலீசார் கூறினர். முன்னதாக போலீசாரிடம் சிக்கிய சிறார்களில் ஒருவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் உள்ளூர் தலைவரின் மகன் என்றும், மற்றொரு சிறுவன் சங்கா ரெட்டியைச் சேர்ந்த டிஆர்எஸ் தலைவரின் மகன் ஆவார்.

கார் சிக்கியது
இந்நிலையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் கார் பண்ணை வீட்டில் இருந்து நேற்று மீட்கப்பட்டது. பதிவு செய்யப்படாத கார், கும்பல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மைனர் ஒருவரின் தந்தையான அரசியல்வாதி ஒருவருக்கு சமீபத்தில் தான் ஒதுக்கப்பட்டது. குற்றத்திற்கு பிறகு அது சுத்தம் செய்யப்பட்டாலும், தடயவியல் குழுவினர் ஆதாரங்களை திரட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications