நள்ளிரவில் துணிச்சலாக கோவிலுக்குள் நுழைந்த திருடன்.. நடந்த ட்விஸ்ட்.. ஆந்திரா முழுக்க இதான் பேச்சு
ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள ஜடுபுடி கிராமத்தில் கோயிலில் திருட முயன்ற ஒருவர் திருடிவிட்டு தப்பிக்க முயற்சிக்கும்போது கோயில் சுவற்றிலேயே சிக்கிக் கொண்டுள்ளார்.
ஹைதராபாத்: கோயிலில் தங்க நகைகளைத் திருடப்போய் ஓட்டையில் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள ஜடுபுடி கிராமத்தில்தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோவிலில் திருடப்போய் சிக்கிக்கொண்ட இளைஞரின் பெயர் பாப்பாராவ் என்பதாகும். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜாடுபுடி கிராமத்தில் கிராம தேவதையான எல்லம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அம்மனுக்கு தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் உள்ளது.
இதனை கவனித்த பாப்பாராவ் சுவற்றில் உள்ள ஓட்டை வழியாக கோவிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த நகைகளை திருடினான்.

சிக்கிக்கொண்ட திருடன்
திருடிய நகைகளுடன் அதே ஓட்டை வழியாக வெளியில் வரும்போது வெளியேற முடியாமல் சிக்கி கொண்டான். இதனால் அவனது பாதி உடல் கோவிலுக்கு வெளியிலும் பாதி உடல் கோவிலுக்கு உள்ளும் மாட்டிக்கொண்டது. விடியவிடிய ஓட்டையில் தொங்கிக் கொண்டிருந்தான்.

விடிய விடிய தொங்கிய திருடன்
இந்நிலையில் விடியற்காலையில் அப்பகுதி வழியாக சென்ற கிராமமக்களை கண்டதும் 'என்னை காப்பாற்றுங்கள்' என அப்பாராவ் கூச்சலிட்டுள்ளார். இதனால் அங்கு சென்ற கிராமமக்கள், பாப்பாராவ்வை பார்த்தபோது, அவர் திருடிய பொருட்களானது கீழே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிடித்த கிராம மக்கள்
பாப்பாராவைப் பார்த்தபோது, அவர் திருடிய பொருட்களானது கீழே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும், பாப்பாராவ் தன்னை காப்பாற்றும் படி கிராமக்களிடம் கதறி அழுத காரணத்தால், கோவில் ஜன்னலின் பிற பகுதிகளை உடைத்து அவரை மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, கஞ்சிலி மண்டல போலீசார் வழக்குப்பதிந்து அப்பாராவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கலகலப்பு சினிமா
கலகலப்பு சினிமா படத்தில் வீட்டின் ஓட்டையில் புகுந்து திருடப்போன திருடன் நகைகளுடன் திரும்ப வரும் போது சிக்கிக் கொள்வார். கடைசியில் வீட்டுக்காரரிடம் பிடிபட்டு தர்ம அடி வாங்குவார். அதே பாணியில் திருடப்போய் மாட்டிக்கொண்ட திருடனின் கதைதான் இப்போது ஊடகங்களில் பரவி வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications