"பத்திக்கிச்சு".. புஷ்பாவே புருஷன் ஆன "மேட்டர்".. சிம்ரனின் காதல் லீலைகள்.. கதிகலங்கி போன கர்னூல்..!

இரு பெண்கள் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டனர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கர்னூல் நகரை சேர்ந்த சிம்ரனுக்கும், அவரது தோழிக்கும் லவ் வந்துவிட்டது.. முறையற்ற காதலால் இந்த 2 பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியதன் உச்சக்கட்டம், புதுவாழ்க்கையை இன்பமாக தொடங்குவதற்காக வீட்டை விட்டு ஓடி போன அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் சேர்ந்தவர் சிம்ரன்.. 20 வயதாகிறது.. அவரது காதலி பெயர் புஷ்பலதா.. 21 வயதாகிறது.. சிம்ரன் காலேஜ் முதல் வருடம் படிக்கிறார்.. புஷ்பலதா படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.. வீட்டில்தான் இருந்து வந்தார். சின்ன வயது முதலே சிம்ரனும் இவரும் 2 பேரும் "திக் ஃபிரண்ட்ஸ்".

எப்போதும் ஒன்றாக நல்லா இருந்த நட்பு திடீரென கோணல் மாணலாக டிராக் மாறியது.. இறுதியில் காதலானது.. பல வருடமாகவே இந்த காதல் இவர்களுக்குள் இருக்கிறது.. ஒருத்தரை பிரிந்து இன்னொருத்தர் இருந்ததில்லை.. எங்கு போனாலும் ஒன்றாகவே ஊர் சுற்றி வந்துள்ளனர்.

ஆசை

ஆசை

ஒருகட்டத்தில் குடும்பம் நடத்த வேண்டும் என்று தம்பதி இருவரும் ஆசைப்பட்டனர்.. அதேபோல, வேறு வேறு நபர்களை கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டால், பிரிய வேண்டி வந்துவிடுமே என்று இருவருமே கலங்கி உள்ளனர்.. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்வதாக முடிவெடுத்துள்ளனர். அதற்காக வீட்டை விட்டும் ஓடினர்.

டிரெஸ்

டிரெஸ்

இந்த கல்யாணத்துக்காகவே அதுவரை பெண்ணாகவே இருந்த புஷ்பா, மாப்பிள்ளை போல டிரஸ் பண்ணிக்கிட்டாராம்.. ஹேர்ஸ்டைல், புது டிரெஸ் என ஆண்களை போலவே அச்சு அசல் மாறிவிட்டார்.. கண்ணாடி அணிந்திருக்கிறார்.

கர்னூல்

கர்னூல்

வீட்டை விட்டு போகும்போது இந்த புஷ்பலதா வீட்டில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றுள்ளார். இதனிடையே 2 வீட்டிலும் மகள்களை காணாமல் தேடி உள்ளனர்.. பிறகு கர்னூல் ஸ்டேஷனில் இது தொடர்பாக பதறி போய் புகார் தந்தனர்.. அந்த சமயத்தில்தான், புஷ்பா, சிம்ரனின் அம்மாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார்.

பரபரப்பு

பரபரப்பு

அதில், இதற்கு பிறகு தங்களை யாரும் தேட வேண்டாம் என்றும் நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த மெசேஜை புஷ்பாவின் அம்மாவுக்கு சிம்ரன் அம்மா தெரியப்படுத்தவும், இரு தாய்மார்களும் கதறி அழுதனர். இப்போது இந்த ஜோடி எங்கே என்று தெரியவில்லை.. போலீசார் அவர்களை தேடி வருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+