ப்ளீஸ் அறிக்கையை படிங்க.. ஸ்டாலின் ஸ்டைலை கையில் எடுத்த ஜெகன்.. பொங்கி எழுந்த பாஜக.. ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலில் எடுத்த முடிவு ஒன்று பாஜகவை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாஜக கூட்டணியில் இல்லை என்றாலும் தீவிரமாக பாஜக எதிர்ப்பை கடைபிடிக்காத நபர். எதிர்க்கட்சி முதல்வர்கள் பலர் தேசிய அளவில் ஒன்று திரண்ட சமயங்களில் எல்லாம் ஜெகன் மோகன் ரெட்டி மட்டும் கொஞ்சம் தனித்தே இருந்து இருக்கிறார். வெளிப்படையாக பாஜகவை மம்தா பானர்ஜி போலவோ ஸ்டாலின் போலவோ ஜெகன் மோகன் ரெட்டி எதிர்த்தது கிடையாது.

முடிந்த அளவு இரண்டு பக்கத்திற்கும் ஆதரவு அளிக்கும் வகையிலேயே ஜெகன் மோகன் ரெட்டி செயல்பட்டு இருக்கிறார். பாஜக ஆதரவும் கிடையாது, எதிர்ப்பும் கிடையாது என்ற நிலையில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி அவ்வப்போது பிரதமர் மோடியை சந்தித்து நட்பாக பேசியும் இருக்கிறார். பாஜகவும் இத்தனை நாள் இவரை நேரடியாக தாக்கி பேசியது கிடையாது. ஆனால் அப்படிப்பட்ட ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ஆந்திர பாஜகவிற்கும் இடையில் தற்போது கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

முடிவு

முடிவு

அதுவும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஸ்டைலில் ஜெகன் மோகன் ரெட்டி விடுத்த அறிக்கை ஒன்றால்தான் இந்த மோதலே ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கடந்த வாரம் தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டார். பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலமாக சென்று விழா நடத்தவும், கடலில் சிலைகளை கரைக்கவும் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. வீட்டில் மட்டுமே பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக மக்கள் வெளியே கூடுவதை தவிர்க்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தடை

தடை

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் முடிவை தமிழ்நாடு பாஜக கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும். இந்து பண்டிகளுக்கு எதிராக திமுக செயல்படுகிறது. டாஸ்மாக் கடைகள் எல்லாம் இயங்குகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்?. அங்கு மட்டும் கொரோனா பரவாதா? விநாயகர்தான் திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார். விநாயகர் சிலை ஊர்வலத்தில் கை வைத்தால் திமுகவின் ஆட்சி கலையும். எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காரணமாக பாஜக - திமுக இடையில் எப்படி மோதல் ஏற்பட்டு இருக்கிறதோ அதே போன்ற மோதல்தான் தற்போது ஆந்திர பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளது. அங்கு தமிழ்நாடு அரசு போலவே அச்சு பிசகாமல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலமாக சென்று விழா நடத்தவும், கடலில் சிலைகளை கரைக்கவும் ஆந்திராவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலவே வீட்டிற்கு உள்ளேயே வைத்து வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மோதல்

மோதல்

ஜெகன் மோகன் ரெட்டி எப்படியும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பார் என்று நினைத்துக்கொண்டு இருந்த பாஜகவிற்கு இந்த செய்தி இடியாக வந்துள்ளது. ஆந்திர மக்களே இந்த ட் விஸ்ட்டை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆம், ஜெகன் இப்படி துணிச்சலாக பண்டிகைக்கு கட்டுப்பாடு போடுவார் என்று யாருமே அங்கு எதிர்பார்க்கவில்லை. ஜெகனின் இந்த முடிவை எதிர்பார்க்காத, ஏற்றுக்கொள்ளாத பாஜக தற்போது அங்கு ஜெகனுக்கு எதிராக கடுமையான வார்த்தை போரில் இறங்கி உள்ளது. பாஜக தலைவர்கள் எல்லோரும் மாறி மாறி ஜெகனுக்கு எதிராக அறிக்கையை வெளியிட்டு வருகிறார்கள்.

பாஜக கோபம்

பாஜக கோபம்

ஜெகன் செய்வது தவறு. இந்து மத பண்டிகைக்கு மட்டும் இப்படி தடை விதிப்பது நியாயம் கிடையாது. வேண்டுமென்றே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கிறார்கள். ஆந்திர பிரதேசத்தில் மால்கள் திறந்து உள்ளது. ஹோட்டல்கள், மது பான கடைகள் திறந்து உள்ளன. சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டது. அங்கெல்லாம் பரவாத கொரோனாவா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பரவ போகிறது. இந்து மத பண்டிகையை ஒடுக்கும் விதமாக ஜெகன் இப்படி நடந்து கொள்கிறார் என்று பாஜக ஆந்திர பிரதேசத்தில் கோபப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கு எதிராக வைக்கப்பட்ட அதே விமர்சனங்களை அங்கு ஜெகன் மீதும் பாஜக வைத்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தமிழ்நாட்டில் திமுக தரப்பு இந்த விமர்சனங்களுக்கு அளித்த பதிலில், மத்திய அரசின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றியே இப்படி செய்கிறோம். பண்டிகை காலத்தில் லோக்கல் லாக்டவுன் போடும்படி மத்திய அரசு கூறியுள்ளது. அதை பின்பற்றியே இப்படி செய்கிறோம் என்று பதில் அளித்து இருந்தது.

அதே ஸ்டைல்

அதே ஸ்டைல்

தமிழ்நாடு போலவே ஆந்திர பிரதேசத்திலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இதே பதிலை அளித்துள்ளது. நாங்கள் இந்து பண்டிகைக்கு தடைவிதிக்கவில்லை . மத்திய அரசு கொரோனா பரவல் ஏற்பட கூடாது என்பதால் பண்டிகை காலங்களில் லோக்கல் லாக்டவுன் போடும்படி சொல்லி இருக்கிறது. அவர்களின் அறிக்கையை பாஜக தயவு செய்து படிக்க வேண்டும். தேசிய அளவிலான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தொடர்ந்து பின்பற்றும்படி மத்திய அரசு கூறியுள்ளது.

ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

அதை பின்பற்றியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கட்டுப்பாடு விதித்து இருக்கிறோம் என்று ஜெகன் அரசு கூறியுள்ளது. ஸ்டாலின், ஜெகன் என்று அடுத்தடுத்து இரண்டு முதல்வர் விதித்த இந்த கட்டுப்பாடு பாஜகவை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களும் ஒரே மாதிரியான முடிவை எடுத்துள்ளது பாஜகவிற்கு தலைவலியாக முடிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+