கோர்டில் அனல் பறந்த வாதம்.."நீங்க செஞ்சது தப்பு.. வழக்கே நிக்காது! சந்திரபாபு நாயுடு தரப்பு பரபர
ஹைதராபாத்: ரூ.300 கோடி ஊழல் புகாரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சில முக்கிய வாதங்களை முன்வைத்தார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சந்திரபாபு நாயுடு. கடந்த 2019ஆம் ஆண்டு வரை ஆந்திர முதல்வராக இருந்த அவர் மீது இப்போது ஊழல் புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், அவர் எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பில் இருப்பதால் அவரை காலை 5.30 மணி வரை கைது செய்ய முடியாது. இதையடுத்து காத்திருந்த போலீசார் காலை 5.30 மணிக்கு அவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்திரபாபு நாயுடு: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் விஜயவாடா ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அரசியல் ரீதியான காரணங்களுக்காக தன் மீது பொய்யான புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் இதனால் தனது குற்றச்சாட்டுகளை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-A பிரிவின்படி அரசு அதிகாரி அல்லது மக்கள் பிரதிநிதி ஒருவரைப் பதவிநீக்கம் செய்ய நடத்தப்படும் விசாரணை என்பது அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்யத் தகுதியான நபரின் அனுமதியைப் பெற்ற பின்னரே நடத்தப்பட வேண்டும்.
வழக்கறிஞர்கள் வாதம்: சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக இருந்தபோது இந்த ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. முதல்வரைப் பதவியில் இருந்து நீக்குபவர் அதாவது இங்கே ஆந்திரப் பிரதேச ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு வழக்குத் தொடர்ந்து இருக்க வேண்டும். ஆனால், ஆளுநரிடம் இருந்து உரிய அனுமதி பெறாமல் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்.
அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்கள் கொள்கை ரீதியான முடிவு.. அவை மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கை முடிவுடன் தொடர்புடையது. இது மாநில அரசின் முடிவாகும், எனவே, கிரிமினல் நடவடிக்கைகளைத் தொடங்கி இதைக் கேள்வி எழுப்ப முடியாது. தொழில் முனைவோர் துறைக்கு மாநில அரசு ஒதுக்கிய ரூ.360 கோடி தொடர்பாக இந்த புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2015-16ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டிலும் இருந்தது.
கிரிமினல் நடவடிக்கை தவறு: சட்டசபையிலும் இது முறையாக நிறைவேற்றப்பட்டது என்பதால் கிரிமினல் விசாரணையைத் தொடங்கி இதை விசாரிக்க முடியாது. இது குறித்த புகாரில் சந்திரபாபு நாயுடுவின் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. மேலும், இது குறித்துக் கடந்த 2021 டிசம்பர் 9ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் அறிக்கையிலும் சந்திரபாபு நாயுடு பெயர் இல்லை.
இந்த நிதியை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது என்ற புகார் எழுந்தால் அதை முறையாக விசாரிக்க வேண்டும். இதற்காக முன்னாள் முதல்வர் ஒருவர் மீது வழக்குத் தொடுப்பது சரியானது இல்லை" என்று சந்திரபாபு நாயுடு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications