ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஃபேக்டர் எக்ஸ்".. சூட்சமத்தை கண்டுபிடித்த இந்திய அணி.. இனிதான் "கச்சேரியே".. ஆஸி.யை வென்றது எப்படி?

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி நேற்று வெற்றிபெற்றது.

நேற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி 20 ஓவரில் 186/7 ரன்கள் எடுத்தது.
கேமரூன் கிரீன் 21 பந்தில் 52 ரன்கள் எடுத்தார்.

இதன்பின் ஆடிய இந்திய அணியில் கோலி 63, சூர்ய குமார் யாதவ் 69 ரன்கள் எடுத்து அசத்தினர். இதனால் 19.5 ஓவரில் இந்திய அணி 187-4 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய அணியின் வெற்றிக்கு அக்சர் பட்டேல் பவுலிங், சூர்ய குமார் ஆகியோரின் பேட்டிங் மிக முக்கியமான காரணமாக இருந்தது.

பழைய ரணங்கள் மறக்குதே! ஸ்கையின் “வானவேடிக்கை”.. முதுகெலும்பாக கோலி -“மோதலுக்கு” பின் மீண்டும் சரவெடி பழைய ரணங்கள் மறக்குதே! ஸ்கையின் “வானவேடிக்கை”.. முதுகெலும்பாக கோலி -“மோதலுக்கு” பின் மீண்டும் சரவெடி

என்ன காரணம்?

என்ன காரணம்?

இந்த தொடரில் இந்த அணி வெற்றிபெற முக்கியமான காரணம் வேறு ஒன்றும் உள்ளது. இந்திய அணி தனது ஃபேக்டர் எக்ஸை கண்டுபிடித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதாவது 6 பவுலிங் ஆப்ஷனுடன் செல்வது. கடந்த சில போட்டிகளாக 5 பவுலர்களை மட்டுமே இந்திய அணி பயன்படுத்தியது. 6வது பவுலராக தீபக் ஹூடா இந்திய அணியில் இருந்தார். ஆனாலும் அவருக்கு பவுலிங் சான்ஸ் கொடுக்கப்படவே இல்லை. இது இந்திய அணிக்கே சிக்கலாக இருந்தது.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இதனால் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 200 பிளஸ் ரன்களை எடுத்து கூட டிபன்ட் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இதனால்தான். அதேபோல் இந்திய அணி பவுலிங்கில் சொதப்பியதும் இதனால்தான். ஆனால் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 6 பவுலர்களை பயன்படுத்தியது. அக்சர் பட்டேல் அணியில் இருந்தார். மேலும் சாஹலும் அணியில் இருந்தார்.

பும்ரா

பும்ரா

ஹர்ஷல் பட்டேல், பும்ரா, புவனேஷ்வர் குமார் இருந்தனர். இது போக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இருந்தார். இதன் காரணமாக இந்திய அணிக்கு 6 பவுலிங் ஆப்ஷன் இருந்தது. இதுதான் இந்திய அணியின் பவுலிங்கில் பல வேரியேஷன் காட்ட காரணமாக இருந்தது. பவர் பிளேவில் நன்றாக ஆடிய ஆஸ்திரேலிய அணி அதன் பின் விக்கெட்டுகளை இழக்கவும் இந்திய அணியின் இந்த வேரியேஷன்தான் மிக முக்கியமான காரணமாக இருந்தது.

பவுலிங் மாற்றம்

பவுலிங் மாற்றம்

கடந்த போட்டிகளில் இந்த வேரியேஷன் இந்திய அணியில் இல்லை. ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு இதே சிக்கல் இருந்தது. இந்திய அணிக்கு இந்த 6வது பவுலர் பலம் என்பது ஃபேக்டர் எக்ஸ் ஆக மாறி உள்ளது. ஏனென்றால் பேட்டிங்கில் 6 வீரர்கள் நன்றாக ஆடுகிறார்கள். அக்சர் பட்டேல் கொஞ்சம் சுமாராக ஆடுவார். இதனால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் தேவை இல்லை. மாறாக பவுலர்தான் தேவை.

 சூட்சமம்

சூட்சமம்

ஆசிய கோப்பை தொடரில் 7 பேட்ஸ்மேன்களுடன் இந்திய அணி களமிறங்கியது. பவுலர்கள் 5 (ஹர்திக் சேர்த்து) பேர் மட்டுமே இருந்தனர். இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணி அக்சர் பட்டேல் வருகையால் அந்த சூட்சமத்தை கண்டுபிடித்து உள்ளது. அதோடு அவர் நன்றாக விக்கெட்டுகளையும் எடுத்து வருகிறார். இதனால் இந்திய அணியின் பவுலிங் மீண்டும் வலிமை அடைந்து உள்ளது.

English summary
What is the factor X for team India's successful T 20 series against Australia?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X