Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டியூஷன் டீச்சரிடம் இவ்வளவு சொத்தா! ரூ.1400 கோடிக்கு ஒப்பந்தம் போடும் ஆசிரியர்.. இதுதான் சக்ஸஸ்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த முன்னாள் டியூஷன் டீச்சர் ஒருவர் ரூ.1400 கோடி ரூபாய்க்கு முதலீடு ஒன்றை செய்ய முடிவு செய்து இருப்பது மக்கள் இடையே கவனம் பெற்றுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் பி நாராயணன். ஆந்திர பிரதேசத்தின் மிகப்பெரிய கல்வியாளர்களில் ஒருவர். ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் கல்வி நிலையங்களை உருவாக்கியவர். இவர் முன்னாள் அமைச்சர். கணிதத்தில் பிஜி படித்து அதில் கோல்டு மெடல் வாங்கியவர். திருப்பதியில் இருக்கும் எஸ்வி பல்கலையில் இவர் பிஎச்டி படித்தவர். பிஎச்டி படித்த பின் கல்லூரி மாணவர்களுக்கு கணிதம் சொல்லி கொடுக்க வேண்டும் என்று டியூஷன் எடுக்க தொடங்கினார். அங்குதான் இவரின் வாழ்க்கை மாறியது.

Who is Narayanan P? How did a Tuition teacher able to make invest for 1400 crore rupees?

நாராயண டியூஷன் சென்டர் என்ற பெயரில் 30 வருடங்களுக்கு முன் இவர் ஹைதராபாத்தில் பல்வேறு இடங்களில் டியூஷன் எடுக்க தொடங்கினார். இந்த சென்டரின் கிளையை பல இடங்களில் அதன்பின் நிறுவ தொடங்கினார் நாராயணன். இவர் கணிதம் எடுக்கும் விதம், போட்டி தேர்வுகளுக்கு கணிதம் சொல்லி கொடுக்கும் விதம் அதிகம் கவனம் பெற்றது. முக்கியமாக போட்டி தேர்வுகளுக்கு பலருக்கு பயிற்சி கொடுக்க தொடங்கினார்.

இதனால் அதிக அளவிற்கு மாணவ, மாணவியர் இங்கே வந்து சேர தொடங்கினர். முக்கியமாக எஞ்சினியரிங் மாணவர்கள், சிஏ மாணவர்கள், போட்டி தேர்வு மாணவர்கள் என்று பலர் கணிதம் படிப்பதற்காக சேர்ந்தனர். முக்கியமாக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர் பலர் இவரின் டியூஷன் சென்டர்களில் சேர தொடங்கினர்.

இதில் வந்த வருமானம் மூலம் பல்வேறு இடங்களில் பள்ளிகளை திறந்த நாராயணன் அதன்பின் கல்லூரி, மருத்துவமனைகள் என்று ஆந்திரா முழுக்க பல்வேறு இடங்களில் திறக்க தொடங்கினார். இப்போது 23 மாநிலங்களில் 750 பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சிகள் நாராயணனுக்கு உள்ளன. இந்நிறுவனம் 50000 ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது. இவர் வெறும் கல்வியாளர் மட்டும் கிடையாது.. இந்த துறையில் இவர் பதித்த வெற்றி மூலம் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் முக்கிய உறுப்பினராகவும் உருவெடுத்தார்.

அந்த கட்சிக்கு சர்வே பணிகளை எடுக்க சென்று கட்சியின் முக்கிய உறுப்பினர் ஆக உயர்ந்தார். இதன் மூலம் ஆக்டிவ் அரசியலுக்கு வந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பாக ஆந்திரப் பிரதேசத்தின் நகராட்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராக கட்சி சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தார். ஆந்திர பிரதேசத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பணக்கார அமைச்சராகவும் நாராயணன் அறிவிக்கப்பட்டார்.

2019 லோக்சபா தேர்தலில் கூட இவர் 668 கோடி ரூபாய் சொத்து தனக்கு இருப்பதாக கணக்கு காட்டி இருந்தார். இவர் மனைவிக்கு மட்டும் தனியாக 400 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இந்த நிலையில்தான் இவரின் நாராயணா நிறுவனம் Nspira Management Services என்ற நிறுவனத்தில் 1400 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

ஐடி மற்றும் மார்க்கெட்டிங் துறையில் மிகப்பெரிய நிறுவனமான Nspira Management Services நிறுவனத்தில் 1400 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இவர்கள் மேற்கொள்ளும் ஒப்பந்தம் தற்போது இந்தியா முழுக்க கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+