இது 3வது முறை! பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணித்த கேசிஆர்! 2 பேர் இடையே என்னதான் பிரச்சனை?
ஐதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் சென்றுள்ள நிலையில் இன்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவரை வரவேற்காமல் புறக்கணித்தார். கடந்த 6 மாதத்தில் மட்டும் இது 3வது புறக்கணிப்பாகும். பிரதமர் மோடி, சந்திரசேகரராவ் இடையே நடந்தது என்ன? என்பது பற்றிய முழுதகவல் வருமாறு:
ஐதராபாத்தில் இன்றும் நாளையும் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இன்று மதியம் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. நாளை பாஜக சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியை வரவேற்காத கேசிஆர்
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ஐதராபாத் சென்றார். வழக்கமாக பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் ஒரு மாநிலத்துக்கு சென்றால் அவர்களை முதல் அமைச்சர்கள் வரவேற்பது வழக்கம். அதன்படி இன்று தெலங்கானா முதல் அமைச்சரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான சந்திர சேகரராவ்(கேசிஆர்) வரவேற்கவில்லை. அவரது சார்பில் அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார்.

ஜனாதிபதி வேட்பாளருக்கு வரவேற்பு
அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தனக்கு ஆதரவு கோரி தெலங்கானா மாநில கட்சி தலைவர்களை சந்திக்க இன்று ஐதராபாத் சென்றார். அவரை சந்திர சேகரராவ் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கு முன்பு ஐ தரபாத் விமான நிலையம் வந்த யஷ்வந்த் சின்ஹாவை சிரித்த முகத்துடன் சந்திர சேகரராவ் வரவேற்றார்.

3வது முறையாக புறக்கணிப்பு
தெலங்கானா வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்காமல் சந்திர சேகரராவ் புறக்கணிப்பது என்பது முதல் முறையல்ல. இது 3வது முறையாகும். அதாவது இன்றுடன் சேர்த்து கடந்த 6 மாதத்தில் மட்டும் பிரதமர் மோடி 3 முறை தெலங்கானா வந்துள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடியை 2 முறை வரவேற்காத சந்திர சேகரராவ் இன்று 3வது முறையாக புறக்கணிப்பு செய்துள்ளார்.

இதற்கு முன் நடந்தது என்ன?
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் சமத்துவத்துக்கான 216 அடி உயரம் கொண்ட ஐம்பொன் ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார். அப்போதும் பிரதமர் மோடியை வரவேற்காத சந்திரசேகரராவ், அந்த விழாவையும் புறக்கணித்தார். அதன்பிறகு இந்தியன் ஸ்கூட் ஆப் பிஸ்னஸ் (ஐஎஸ்பி) 20வது ஆண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது சந்திர சேகரராவ் பிரதமர் மோடியை வரவேற்காமல் பெங்களூர் சென்றார். அதற்கு முன்பு சிலை திறப்பு விழாவில் அவர் பங்கேற்கவில்லை.

காரணம் என்ன?
தெலங்கானா மாநிலத்துக்கு நெல் கொள்முதல் செய்த விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை பின்பற்றியதாக சந்திரசேகரராவ் கூறினார். மேலும் நிவாரணம், ஜிஎஸ்டி தொகை வழங்குவதிலும் தெலங்கானா புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக தான் பிரதமர் மோடியையும், பாஜக அரசையும் சந்திர சேகரராவ் விமர்சனம் செய்து வருகிறார்.

3வது அணி அமைக்க முடிவு
மேலும் 2024 மக்களவை பொதுத்தேர்தலுக்கா தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 3வது அணி திரட்ட சந்திரசேகரராவ் ஈடுபட்டு வருகிறார். இதற்கான வியூகங்களை அவர் வகுத்து வருவதோடு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதன்காரணமாக தான் சந்திர சேகரராவ்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதை புறக்கணித்து வருகிறார்.

பேனர்-டுவிட்டரில் எதிர்ப்பு
மேலும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதரபாத்தில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ByeBye Modi எனும் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications