ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹைதராபாத்தில் மலரும் "தாமரை".. தெலுங்கானாவை அடிச்சு தூக்கும் பாஜக?.. தேசிய செயற்குழுவில் பிரதமர் உரை

ஹைதராபாத்தில் பிரதமர் மோடி இன்றும் உரை நிகழ்த்த போகிறார்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.. மாலை செகந்திராபாத்தில் பிரதமரின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்காக தேசிய கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன.. தென்மாநிலங்களையும் எப்படியாவது எட்டிப்பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக மேலிடம் இறங்கி வருகிறது.

இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான பாஜக தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று துவங்கியது.. 2 நாட்கள் நடைபெற உள்ள கூட்டத்திற்கு, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் வருகை தந்துள்ள நிலையில், உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 மக்களைக் காப்பாற்றிய திட்டம் இது.. ஆனால் மோடி ஒப்புக்கொள்ளவில்லை.. ராகுல் காந்தி விமர்சனம்! மக்களைக் காப்பாற்றிய திட்டம் இது.. ஆனால் மோடி ஒப்புக்கொள்ளவில்லை.. ராகுல் காந்தி விமர்சனம்!

ஹைதராபாத்

ஹைதராபாத்

தேசிய தலைவர்கள் அத்தனை பேருமே இந்த 2 நாள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.. பிரதமர் மோடி நேற்றே ஹைதராபாத் வந்துவிட்டார்.. இன்றும் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்... நேற்றைய கூட்டத்தின் முடிவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும், அக்னிபாத் திட்டத்துக்கும் வரவேற்பு தெரிவித்து பாஜக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.. இன்றைய தினம் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்த போகிறார்.. இன்று மாலையில் செகந்திராபாத்தில் நடக்க போகும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திலும் உரை நிகழ்த்த போகிறார்..

தமிழிசை

தமிழிசை

இந்த கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனையடுத்து 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் மோடி ஏர்போர்ட்டில் கால் வைத்ததுமே, தெலுங்கானா அரசியல், பெரும் பரபரப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.. காரணம், ஹைதராபாத் ஏர்போர்ட்டுக்கு வந்தடைந்த பிரதமரை, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்... எனினும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை நேரில் வரவேற்கவில்லை.

 யஷ்வந்த் சின்கா

யஷ்வந்த் சின்கா

ஆனால், அதே ஃபிளைட்டில், சில மணி நேரத்திற்கு முன்புதான் யஷ்வந்த் சின்கா வந்தார்.. இவர் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்... யஷ்வந்த் சின்ஹாவை ஏர்போர்ட் வந்ததுமே, சந்திரசேகர ராவ் விரைந்து சென்று நேரிலேயே அவரை வரவேற்றார்.. இந்த விவகாரம் தெலுங்கானா அரசியலில் பேசுபொருளாகி வருகிறது.. விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது..

 நரிகள் - புலிகள்

நரிகள் - புலிகள்

இது குறித்து, தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் சொல்லும்போது, "புலி வரும்போது நரிகள் இப்படித்தான் ஓடிவிடும்.. புலி வந்ததுமே, சந்திரசேகர ராவ் ஓடிவிட்டார். விரைவில், காவி, தாமரை கொடி இங்கு ஏற்றப்படும் என்று கூறியிருந்தது, எதிர்தரப்பினருக்கு எரிச்சலை கிளப்பி விட்டுள்ளது.

 சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்

கடந்த சில காலமாகவே, தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும், பாஜகவுக்கும் மோதல் போக்கு நிலவிவருகிறது.. அதனாலேயே, பிரதமர் மோடியை சந்திப்பதை சந்திரசேகர ராவ் மறுபடியும் தவிர்த்துள்ளதாக தெரிகிறது.. இன்று நடக்க போகும் கூட்டத்தில், தென் மாநிலங்களில் கட்சி வளர்ப்பதை குறிவைத்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என தெரிகிறது.. தென் மாநிலங்களை எடுத்து கொண்டால், இப்போதைதக்கு கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி செய்து வருகிறது...

 திடீர் திருப்பங்கள்

திடீர் திருப்பங்கள்

அதனால்தான், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பாஜகவை வலிமை பெற்ற சக்தியாக மாற்ற இன்றைய நாளில், முக்கிய யூகங்கள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதுவும் இல்லாமல், இன்னும் 2 வருஷத்துக்குள் தெலங்கானாவில் தேர்தலும் நடைபெறவுள்ளது.. ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு நெருக்கடி கொடுக்க பாஜக இப்போதே ரெடியாகியும் வருகிறது.. ஆக மொத்தம், பாஜக செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து ஹைதராபாத்தில் அரசியல் திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது...

English summary
Will BJP's strategy work in Telangana and pm modi to address public meeting in hyderabad today ஹைதராபாத்தில் பிரதமர் மோடி இன்றும் உரை நிகழ்த்த போகிறார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X