ராஜஸ்தான் மத அடையாள கொடிகளுக்கு தடை! அஜ்மீர் மாவட்ட நிர்வாகம் போட்ட அதிரடி உத்தரவு
அஜ்மீர்: ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் ஒலி மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்தில் பொதுவெளி மற்றும் மத வழிபாட்டு தலங்களில் ஒலி பெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் மத அடையாளங்களுடனான கொடிகளையும் பயன்படுத்த அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். இந்நியைில் ராஜஸ்தானில் உள்ள கவுரலி மாவட்டத்தில் இந்துக்கள் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர். அப்போது கல்வீச்சு நடத்தப்பட்டது.
இதையடுத்து இருதரப்பு மோதல் நடந்தது. வன்முறை நடந்தது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஒலிபெருக்கி, கொடிக்கு தடை
இந்த நிலையில் தான் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்ட நிர்வாகம் அனைத்து பொது மற்றும் மதவழிபாட்டு தலங்களிலும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மேலும், மாவட்டத்தின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மத அடையாள கொடிகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அனீஷ் தீப் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒலிபெருக்கி தடை ஏன்
அஜ்மீர் மாவட்டத்தின் எல்லைக்குள் (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்கள் உட்பட) பல்வேறு மத அல்லது பிற செயல்பாடுகளுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக அதிக சத்தம் ஏற்பட்டுள்ளது. ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டியது அவசியமாகும். இதனால் தனிநபர் அல்லது குறிப்பிட்ட அமைப்பு, குழு அல்லது பிரதிநதி அனுமதியின்றி ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது. யாரேனும் அவற்றை பயன்படுத்த விரும்பினால் முறைப்படி அனுமதி பெற வேண்டும். மேலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை எந்த காரணத்தை கொண்டும் ஒலிபெருக்கிக்கு அனுமதி வழங்கப்படாது. அத்துடன் ஒலி மாசுபாட்டின் அளவுக்கான ஒலி மாசு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 2000 அட்டவணையில் குறிப்பிட்டுள்ள அளவை விட ஒலி அதிகளவில் இருக்கக்கூடாது. அனைவரும் இந்த உத்தரவுக்கு இணங்க வேண்டும். இந்த உத்தரவை மீறக்கூடாது. மீறினால் அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188ன் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடிக்கு தடை ஏன்
சட்டம்-ஒழுங்கை பாதித்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதன் காரணமாக பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படவும், சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கம் சீர்குலையவும் வாய்ப்புள்ளது. இதை காக்க தடுப்பு நடவடிக்கை அவசியம். எனவே அஜ்மீரில் குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவு 144ன் கீழ் மாவட்டம் முழுவதும் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மத அடையாளம் கொண்ட கொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, கர்நாடகம்
மகராஷ்டிரா மாநிலம் மும்பையை தொடர்ந்து கர்நாடகத்திலும் மசூதிகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியது. ஒலிபெருக்கி பயன்பாடு குறித்து ஏற்கனவே கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் ஒலிபெருக்கி பயன்பாட்டை பொறுத்தமட்டில் வழிபாட்டு தலங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் உயர்நீதிமன்ற உத்தரவு பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் நோட்டீசும் வழங்கி உள்ளனர். இந்நிலையில் தான் ராஜஸ்தான் அஜ்மீரில் அனைத்து இடங்களிலும் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications