40 வருடங்களில் இல்லாத பெரும் வீழ்ச்சி.. 2020 - 2021 நிதியாண்டில் இந்திய ஜிடிபி -7.3 % ஆக சரிவு
டெல்லி: 2020- 2021ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -7.3 சதவீதம் சரிந்துள்ளது. 40 வருடங்களில் இல்லாத சரிவாகும் இது.
கொரோனா காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 2020-2021 முதல் மூன்று காலாண்டுகள் மோசமான சரிவை சந்தித்தது. லாக்டவுன் காரணமாகவும், கொரோனா பாதிப்பு, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிந்து வருகிறது.

முன்னதாக 2020-21ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் கொரோனா தொற்று மற்றும லாக்டவுன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் -24.37 சதவீதம் வரையில் சரிந்தது. 40 வருடங்களில் இதுதான் மோசமான வீழ்ச்சி.
அதன்பின் சரிவில் இருந்து ஜிடிபி கொஞ்சம் கொஞ்சமாக மீண்டது. ஆனாலும் பெரிய அளவில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையவில்லை. இந்திய ஜிடிபி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் -7.5% ஆக இருந்தது. அதன்பின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் ஜிடிபி 0.4% ஆக இருந்தது. அதிகாரபூர்வ டெக்னிக்கல மந்தநிலையில் இருந்து இந்தியா இந்த காலாண்டில்தான் மீண்டும்.
இந்த நிலையில் தற்போது மத்திய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டு இருக்கும் ஜிடிபி அறிக்கையின்படி, ஜனவரி - மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 1.6 சதவீதம் வளர்ச்சி ஆக உள்ளது. மொத்தமாக 2020 - 2021ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -7.3 சதவீதம் சரிந்துள்ளது.
கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி அளவு 4 சதவீதம் வரையில் சரிந்த 11 வருட பதிவு செய்தது. தற்போது அதைவிட மிக மோசமான சரிவை ஜிடிபி சந்தித்துள்ளது. 40 வருடங்களில் இல்லாத சரிவாகும் இது.
2021ஆம் நிதியாண்டில் 8 முக்கிய துறைகள் மொத்த வளர்ச்சி -6.5 சதவீதமாக உள்ளது. 2020- 2021 நிதியாண்டில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை 9.3% ஆக உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications