டெல்லியில் இரவு 9.30 மணி வரை நீடித்த வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வம் காட்டினர். மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடையும் என்றாலும் பல வாக்குச் சாவடிகளில் நீண்ட வரிசைகளில் வாக்காளர்கள் காத்திருந்தனர்.
டெல்லி முழுவதும் ஏறத்தாழ 1 லட்சத்து 72 ஆயிரம் வாக்காளர்கள் இதேபோல் காத்திருந்ததாக மதிப்பிடப்பட்டது. இதனால் வாக்குப் பதிவு நேரத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதன்படி மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஒக்லா தொகுதியில் ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்ததால் அங்கு இரவு 9.30 மணி வரை வாக்குப் பதிவு நீடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications