ஆமீர்கானின் சகிப்புத்தன்மை பேச்சை எதிர்த்து 1 லட்சம் ஸ்நாப்டீல் அப்ளிகேஷன்கள் டெலிட்
பெங்களூர்: சகிப்புத்தன்மை பற்றி பேசிய ஆமீர்கான் மீதான கோபத்தை, அவர் விளம்பர தூதராக இருக்கும் ஸ்நாப் டீல் நிறுவனம் மீது காண்பித்துள்ளனர், பல நெட்டிசன்கள். இதன் வெளிப்பாடாக செல்போனில் தாங்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருந்த ஸ்நாப்டீல் நிறுவன அப்ளிகேஷனை சுமார் ஒரு லட்சம் பேர் டெலிட் செய்துள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் சகிப்புத்தன்மையற்ற செயல்களை பார்த்து, எனது மனைவி, நாட்டை விட்டு போய்விட நினைத்தார் என்று ஹிந்தி நடிகர் ஆமீர்கான் இரு நாட்கள் முன்பு தெரிவித்திருந்தார். இந்த கருத்து இந்தியாவை அவமானப்படுத்துவதாக இருப்பதாக சமூக தளங்களில் கண்டன குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஆமீர்கானுக்கு பதிலடி கொடுப்பதற்காக, அவர் விளம்பர தூதராக நடித்துள்ள ஸ்நாப்டீல் நிறுவனத்தின் அப்ளிகேஷன்களை செல்போன்களில் இருந்து டெலிட் செய்துள்ளனர் பல நெட்டிசன்கள். சுமார் 48 மணி நேரத்தில், 1 லட்சம் அப்ளிகேஷன்கள் மாயமானதாக ஸ்நாப்டீல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும், பலர் ஸ்நாப்டீலுக்கு அளித்திருந்த ரேட்டிங்கை, குறைத்து பதிவிட்டுள்ளனர். 5 ஸ்டார் கொடுத்தவர்கள்கூட, இப்போது ஒரு ஸ்டார்தான் கொடுத்துள்ளனர். இந்த அதிரடியால் ஸ்டாப்டீலுக்கு பெரும் இழப்பு உருவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்வது எப்படி என ஸ்நாப்டீல் ஆலோசித்து வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications