For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமா 100 நாட்கள்- மோடி 100 நாட்கள்... சில ஒற்றுமைகள்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி; அமெரிக்காவின் அதிபர் ஒபாமா பதவியேற்ற முதல் 100 நாட்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற முதல் 100 நாட்களுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

2008 ஆம் ஆண்டு ஒபாமா அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்ற போது அவர் முன் இருந்த முதலாவது சவாலே நாட்டின் பொருளாதாரம்தான். அப்போது அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 0.3%தான்.

2014-ல் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற போது அவர் முன் இந்த முதலாவது சவாலும் பொருளாதாரம்தான். மோடி பொறுப்பேற்ற போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 4.5% ஆக இருந்தது.

மக்கள் நலத் திட்டம்

மக்கள் நலத் திட்டம்

அமெரிக்கா அதிபராக ஒபாமா பதவியேற்ற முதல் 100 நாட்களில் சுகாதார காப்பீடு உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்.

இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற முதல் 100 நாட்களில் ஜன் தன் யோஜனா, அனைவருக்கும் வங்கிக் கணக்கு போன்ற மக்கள் நலத் திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்தார்

பெண்கள் மேம்பாடு

பெண்கள் மேம்பாடு

ஒபாமா பெண் குழந்தைகள் கொலை தடுப்பு குறித்தும் பாலின சமத்துவம் குறித்தும் பேசினார். பிரதமர் மோடியும் தமது சுதந்திர நாள் உரையில் பெண் குழந்தை கொலை தடுப்பு மற்றும் பெண்கள் கல்வி மேம்பாடு குறித்து விரிவாகப் பேசினார்.

100 நாள் சர்வே

100 நாள் சர்வே

ஒபாமா பதவியேற்ற 100 நாட்கள் குறித்த சர்வேயில் 65% பேர் அவருக்கு ஆதரவாக இருந்தனர். 25% பேர் அவருக்கு எதிராக இருந்தனர்.

மோடி பதவியேற்ற 100 நாட்கள் பற்றிய இந்தியா டுடே குழுமத்தின் சர்வேயில் 57% பேர் மோடிதான் சிறந்த பிரதமர் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகத்தின் பார்வை..

உலகத்தின் பார்வை..

ஒபாமா பதவியேற்ற போது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்த நிலைப்பாட்டை அறியக் காத்திருந்தனர்.

மோடி பதவியேற்ற போது பாகிஸ்தான் பிரச்சனையை எப்படி கையாள்வார் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரேலியா ஆகியவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இழுத்து மூடப்பட்ட திட்டங்கள்

இழுத்து மூடப்பட்ட திட்டங்கள்

ஒபாமா பொறுப்பேற்ற பின்னர் முந்தைய புஷ் ஆட்சிக் காலத்து திட்டங்கள் கைவிடப்பட்டன.

மோடி ஆட்சிக் காலத்தில் திட்டக் கமிஷன் உள்ளிட்டவற்றுக்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.

நடத்தை விதிகள்

நடத்தை விதிகள்

ஒபாமாவும் மோடியும் அமைச்சர்களுக்கும் சரி அரசு ஊழியர்களுக்கும் கடுமையான நடத்தை விதிகளை வகுத்தனர்.

English summary
Prime Minister Narendra Modi and US President Barack Obama are among the world's powerful leaders. Obama has shown thw world his leaderaship skills as the US president for the second onsecutive term while Modi has garnered the world attention with his flawless governance skills even before becoming the prime minister of India, as the successful chief minister of Gujarat for 15 years. Lets take a look at some similarities of the first 100 days of Mosi and Obama government:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X