For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காப்பாத்துங்க.. 80 அடி போர்வெல்லில் கேட்கும் அழுகுரல்! 11 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்!

Google Oneindia Tamil News

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் வீட்டின் பின்புறம் இருந்த 80 அடி ஆழம் கொண்ட போர்வெல்லில் (ஆழ்துளை கிணறு) 11 வயது விழுந்த சிறுவன் ‛காப்பாத்துங்க... காப்பாத்துங்க' என அழுத நிலையில் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள பிக்ரிட் கிராமத்தை சேர்ந்தவர் லாலா ராம் சாகு. இவரது மகன் ராகுல் சாகு (வயது 11).

ஷாக்! டேட்டிங் ஆப் சாட்டிங்..! டெல்லிக்கு பறந்த பச்சைக்கிளி! மயக்க மருத்து கொடுத்து சீரழித்த குப்தா!ஷாக்! டேட்டிங் ஆப் சாட்டிங்..! டெல்லிக்கு பறந்த பச்சைக்கிளி! மயக்க மருத்து கொடுத்து சீரழித்த குப்தா!

இந்நிலையில் லாலாராம் சாகு தனது வீட்டின் பின்பு 80 அடிக்கு போர்வெல் (ஆழ்துளை கிணறு) அமைத்தார். இதன்மூலம் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை விளைவித்தார்.

 11 வயது சிறுவன்

11 வயது சிறுவன்

இந்நிலையில் சமீபத்தில் ஆழ்துறை கிணற்றில் நீர் வற்றியது. இதனால் அவரால் அதனை பயன்படுத்த முடியவில்லை. இதையடுத்து அந்த கிணற்றை அவர் அப்படியே விட்டுவிட்டார். இந்நிலையில் நேற்று மதியம் ஆழ்துளை கிணறு அருகே லாலராம் சாகுவின் மகன் ராகுல்சாகு சென்றார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.

சிறுவனின் அழுகுரல்

சிறுவனின் அழுகுரல்

மேலும் ‛‛காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...'' என கதறி அழுதார். இந்த சத்தம் மேலே கேட்டது. அப்போது தான் ராகுல்சாகு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததை அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அறிந்தனர். இதையடுத்து அவர்கள் சிறுவனிடம் பேச்சு கொடுத்தனர். அவர்களிடம் பேசிய சிறுவன் தன்னை காப்பாற்றும்படி அழுதது அனைவரையும் கலங்க வைத்தது.

மீட்பு பணி தீவிரம்

மீட்பு பணி தீவிரம்

இதையடுத்து உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மீட்பு பணி துவங்கப்பட்டது. முதற்கட்டமாக ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சிறுவனின் சுவாசத்துக்கு தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநில பேரிடம் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணி நடந்தது. இருப்பினும் சிறுவனை மீட்க முடியவில்லை.

பத்திரமாக மீட்க நடவடிக்கை

பத்திரமாக மீட்க நடவடிக்கை

இதனால் இன்று காலையும் மீட்பு பணி தொடர்ந்தது. ஒடிசாவில் இருந்து தேசிய மீட்பு படையினர் வந்துள்ளனர். இதுபற்றி எஸ்பி விஜய் அகர்வால் கூறுகையில், ‛‛தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் சேர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. விரைவில் உயிருடன் மீட்போம்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி முதல்வர் பூபேஷ் பாகேல் கூறுகையில், ‛‛சிறுவனை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசு மூலம் செய்யப்படும்'' என தெரிவித்துள்ளார்.

English summary
An 11-year-old boy fell into a 80-feet deep abandoned borewell at a village in Chhattisgarh’s Janjgir-Champa district. Teams from the National Disaster Response Force (NDRF) and state disaster response force (SDRF) have been called to assist in the rescue operation that has been on since yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X