2 தாலி.. 2 கணவர்கள் ஒரே வீட்டில்.. ஒன்னா சாப்பிடுவாங்களாம், ஒன்னா தூங்குவாங்களாம்.. பூரிக்கும் மனைவி
கான்பூர்: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது.. இளம்பெண்ணுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்கள் குவிந்து வருவதுடன், இந்த வீடியோவை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
பொதுவாக, ஒரு கணவருக்கு 2 மனைவிகள் இருப்பார்கள்.. ஒரு கணவருக்கு 2 பெண்களும் அடித்து கொள்வார்கள்.. அல்லது 2 மனைவிகளுமே ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் அனுசரித்து வாழ்வார்கள்.

2 மனைவிகள்: அதேபோல, கணவருடன் வாழும் பெண், கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரிட்டால், முதல் கணவரை உதறித்தள்ளிவிட்டு 2வது திருமணம் செய்வார்கள். அல்லது கணவனுடன் வாழ்ந்துகொண்டே கள்ளக்காதலில் ஈடுபட்டு விடுவார்கள்.
ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள தியோரியா என்ற பகுதியில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. வீடியோவில் அவர் அலங்காரம் செய்து மணப்பெண் போல காட்சியளிக்கிறார். இந்த பெண் தன்னுடைய கழுத்தில் இரு தாலிகள் அணிந்துள்ளார். இரு ஆண்கள் தோள் மீது கை போட்டு போஸ் கொடுத்திருக்கிறார்..
சகோதரர்கள்: அந்த இரண்டு ஆண்களும், பெண்ணின் கணவர்கள் ஆவர்.. அதுமட்டுமல்ல, அவர்கள் 2 பேருமே சகோதரர்கள் என்கிறார்கள். 2 கணவன்களுடன் என, மொத்தம் இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்களாம்.
இது பற்றி அந்தப்பெண் சொல்லும்போது, இது என்னுடைய 2 தாலிகள்.. என்னுடைய 2 கணவர்களுக்காகவும் இந்த தாலிகளை அணிந்துள்ளேன். நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நாங்கள் எங்கே சென்றாலும் மூன்று பேருமே ஒன்றாகத்தான் செல்வோம். ஒன்றாக தான் சாப்பிடுவோம். 3 பேருமே ஒன்றாக சேர்ந்துதான் தூங்குவோம்.
பூரித்த மனைவி: என்னுடைய 2 கணவர்களுடனும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கிறேன்.. எங்களுக்குள் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம் என்று பூரித்து சொல்லி உள்ளார.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 1.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது... அத்துடன், சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி பேசும் பொருளாகவும் உருவெடுத்துள்ளது.
எனினும், ஒருசிலர் இந்த வீடியோவை பார்த்து, உண்மையிலேயே ஒரு பெண் 2 கணவன்களுடன் ஒரே வீட்டில் வாழ முடியாது.. இந்த பெண் தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே, இப்படி 2 ஆண்களுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதனால் பெண்ணின் கூற்றுகளில் உண்மைத்தன்மை இருப்பாக தெரியவில்லை என்றும் சந்தேகம் கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications