For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜஸ்ட் ஒரு மணி நேரம்தான்.. "சம்பவம்" செய்த வடகொரியா.. ஒரேநாளில் 23 ஏவுகணைகள்.. அதிர்ந்துபோன அமெரிக்கா

ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி அதிர வைத்துள்ளது வடகொரியா

Google Oneindia Tamil News

பியாங்யாங்: வடகொரியா இன்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.. வடகொரியா ஏவுகணை சோதனை நடத்திய, அதேபகுதியில் தென்கொரியாவும் ஏவுகணைகளை ஏவி பதிலடி தந்துள்ளது.. இப்படி 2 நாடுகளுமே அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி கொண்டிருப்பதால், கொரிய தீபகற்பத்தில் மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது... இதையெல்லாம் பார்த்து அமெரிக்கா அதிர்ந்து போய் கிடக்கிறது.

உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. அதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்..

ஆனால், அரசியல் விவகாரங்களில் ரோஷக்காரர்.. சற்று கோபக்காரரும்கூட.. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன.

ஓவர்பாசம்

ஓவர்பாசம்

அமெரிக்காவிடம் 5,800 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 6,375 அணு ஆயுதங்களும் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.. அதேபோல், வடகொரியாவிடம் சுமார் 40 அணு ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனால்தானோ என்னவோ, அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும், ஏவுகணைகளை சோதனை அடிக்கடி செய்து, உலக நாடுகளுக்கு அடிக்கடி ஷாக் தந்து வருகிறார் கிம்.. அதிலும், தென்கொரியா என்றால், கொஞ்சம் "ஓவர்பாசம்"தான்..

டெஸ்ட்கள்

டெஸ்ட்கள்

நிரந்தர எதிரியாக கருதப்படும் தென் கொரியாவாகட்டும், அதற்கு இணையாக கருதப்படும் அமெரிக்காவாகட்டும், இந்த 2 நாடுகளை சீண்டுவதுதான் வடகொரியா வேலை. தொடர்ந்து இந்த நாடுகளின் மீது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது... சில நாட்களாகவே, இப்படி ஏவுகணை சோதனைகளை நடத்திய, கொரிய தீபகற்பத்திலேயே பெரிய போர் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது இந்த வடகொரியா.. அதுமட்டுமல்ல, தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, இப்படிப்பட்ட தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி கொண்டிருருக்கிறது..

 17 ஏவுகணைகள்

17 ஏவுகணைகள்

ஒருபக்கம் தாக்குதல் நடத்தி கொண்டே மறுபக்கம், அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்றும் வார்னிங் தந்து கொண்டே இருக்கும் வடகொரியா. இந்நிலையில், வடகொரியா இன்று ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது.. காலை 17 ஏவுகணைகளும், மதியம் 6 ஏவுகணைகளும் என மொத்தம் 23 ஏவுகணைகளை ஏவி வடகொரியா மிரட்டியுள்ளது.. இதைதவிர, 100-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை பதற்றம் நிறைந்த கிழக்கு கடற்பகுதியில் வீசி வடகொரியா சோதனை நடத்தியிருக்கிறதாம்..

வார்னிங்

வார்னிங்

வடகொரியா இப்படி அதிரடியில் இறங்கியதால், பதிலுக்கு தென்கொரியாவும் கோதாவில் குதித்துவிட்டது.. 2 நாடுகளும் மாறி மாறி, ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து தென் கொரியா உடனடியாக வான் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தங்கள் பக்கம் இருந்தும் வட கொரியாவை குறிவைத்து ஏவுகணை வீசியுள்ளனர். முன்னதாக, வடகொரியாவின் பாலிஸ்டிக் ஏவுகணையானது தென் கொரியாவுக்கு 60 கி.மீ தொலைவில் வந்து விழுந்ததாம்..

 ஷார்ப் 8.55

ஷார்ப் 8.55

இதை பார்த்துவிட்டுதான், போர் விமானத்தில் இருந்து 3 ஏவுகணைகளை தென் கொரியாவும் பதிலுக்கு ஏவியிருப்பதாக சொல்கிறார்கள்.. வட கொரியா தரப்பில் முதலில் 10 ஏவுகணைகள் ஏவியதாக தெரிகிறது.. இதில் ஒரு ஏவுகணையானது 2 நாட்டுக்கும் பொதுவான ஒரு நிலப்பரப்பில் வந்து விழுந்திருக்கிறது.. அதற்கு பிறகுதான், திடீரென்று தென் கொரியா தன்தரப்பு ஏவுகணை தாக்குதலை ஆரம்பித்துள்ளது.. உள்ளூர் நேரப்படி காலையில் 8.55 மணிக்கு, திடீரென்று வான் தாக்குதல் குறித்து வார்னிங் தந்துள்ளது..

 24 மணி நேரம்

24 மணி நேரம்

இதனால் பொதுமக்களும் அலறியடித்து கொண்டு அந்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ளனர்.. அதற்கு பிறகு, 9.15 மணிக்கு பயங்கரமான சத்தம் ஒன்று கேட்டதாக அந்த மக்கள் சொல்கிறார்கள்.. ஆனால், தீவின் தெற்கு பகுதியில் வசிப்பவர்களுக்கு எந்தவிதமான வார்னிங்கும் தரப்படவில்லை என தெரிகிறது.. அமெரிக்காவும், தென் கொரியாவின் விமானப்படைளும் நேற்று முன்தினம் இருந்து இப்படி கூட்டுப்பயிற்சியை ஆரம்பித்தன.. 2 நாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த, நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்..

கதறல்

கதறல்

அமெரிக்காவுடன் சேர்ந்து பயிற்சி செய்யக்கூடாது என்றுதான் இத்தனை காலமும் வடகொரியா கதறி கொண்டிருக்கிறது.. என்ன மிரட்டினாலும் அந்த 2 நாடுகளும் அசரவேயில்லை.. தொடர்ந்து கூட்டுப்போர் பயிற்சிகளை நடத்துவதை பார்த்ததும், மறுபடியும் வடகொரியா கொந்தளித்துவிட்டது.. கூட்டுப்பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்தது.. பிறகு, அமெரிக்கா + தென் கொரியா நாடுகள், வெறுப்பேற்றுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் எச்சரித்திருந்தது...

டென்ஷன்

டென்ஷன்

எனினும், அடுத்தடுத்த வார்னிங் விடுக்கப்பட்டும், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தான் யார் என்பதை காட்டியது வட கொரியா.. சடசடவென ஏவுகணைகளை ஏவி, தென் கொரியாவை மொத்தமாக மிரள செய்துவிட்டது.. அதுமட்டுமல்ல, தென் கொரியா கடற்பகுதியில், வடகொரிய ஏவுகணை ஒன்று குறிவைக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.. ஆகமொத்தம், 2 நாடுகளும் மாறி மாறி, ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் எகிறி வருகிறது.. அமெரிக்கா அப்படியே ஆஃப் ஆகி கிடக்கிறது..!!

English summary
23 Missiles: North Korea fires 17 missiles, one landing off South Korean coast for first time
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X