ஈவ் டீசிங் அட்டகாசம்.. ஓடும் பஸ்சிலிருந்து குதித்த 3 பள்ளிச் சிறுமிகள்
ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் ஈவ் டீசிங் தொல்லையால் பெரும் அவதியடைந்த 3 பள்ளிச் சிறுமிகள் ஓடும் பஸ்சிலிருந்து குதித்த செயல் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
சாக்சி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கீழே குதித்ததில் ஒரு மாணவி காயமடைந்தார்.

இதுகுறித்து முதுநிலை எஸ்.பி. அனூப் மாத்யூ கூறுகையில், மூன்று பேரும் ஒரே பள்ளியி்ல் படித்து வருபவர்கள் ஆவர். சாக்சியில் பஸ் ஏறியுள்ளனர். அப்போது அங்கிருந்த சில ஆண்கள் இவர்களிடம் டீஸ் செய்துள்ளனர். பஸ் டிரைவர், கண்டக்டரிடம் இதுகுறித்து மாணவிகள் கூறியும் பலன் இல்லை. பஸ்சை நிறுத்துமாறும் அவர்கள் கோரியுள்ளனர். ஆனால் பஸ் நிறுத்தப்படவில்லை. இதையடுத்து 3 பேரும் கீழே குதித்து விட்டனர்.
விசாரணையில் இந்த மாணவிகளை கிண்டல் செய்தவர்கள், பஸ் டிரைவரின் நண்பர்கள் எனத் தெரிய வந்துள்ளது. காயமடைந்த சிறுமியை அப்பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமிகளை கேலி செய்த 2 பேரையும், பஸ் டிரைவரையும் கைது செய்துள்ளோம். பஸ்ஸை பறிமுதல் செய்துள்ளோம். மற்றவர்களையும் தேடி வருகிறோம் என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications