கொடுமை..12 வயது சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள்.. சோஷியல் மீடியாவில் வீடியோ
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டிய 3 சிறுவர்கள், வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இவ்வழக்கில் 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

புகார்
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "ஜாஜ்பூர் மாவட்டத்தின் ஜெனாபூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் எங்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தார். புகாரில் தனது 12 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தள ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் புகார் உண்மை என்று தெரிய வந்தது. உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேட தொடங்கினோம்.

பாலியல் பலாத்காரம்
சிறுமியிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டது. விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் என்றும் அவர்கள் அனைவருமே 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் என்பதும் உறுதியானது. சில நாட்களுக்கு முன்னர் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று இந்த மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். மட்டுமல்லாது அதனை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

மிரட்டல்
இது நடந்து சில நாட்கள் ஆகியுள்ளது. பின்னர் இந்த சிறுவர்கள் சிறுமியிடம் ரூ.20,000 ஆயிரத்தை கேட்டிருக்கிறார்கள். ஆனால் சிறுமி இதனை கொடுக்க மறுத்துள்ளார். பின்னர் இந்த வீடியோவை சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். ஓரிரு நாளில் வீடியோ சிறுமியின் உறவினர் கைக்கு வந்துள்ளது. இதை உறவினர் சிறுமியின் தந்தையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ந்துபோன தந்தை சிறுமியிடம் விசாரித்துள்ளார்.

கைது
அப்போதுதான் சிறுமி அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளார். இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரில் சிறுவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மூவரில் ஒருவர் பொறியியல் டிப்ளமோ படித்து வருகிறார்." என காவல்துறையினர் கூறியுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை தடுத்து நிறுத்த உறுதியான சட்டங்களுடன் போதிய அளவிலான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications