For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம் ரஹீம் வன்முறையாளர்களால் பதற்றம்: டெல்லியில் 144 தடை உத்தரவு

ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்களின் கட்டுக்கடங்காத வன்முறை காரணமாக செப்டம்பர் 8ம் தேதி வரை டெல்லியின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். செப்டம்பர் 8ம் தேதி வரை டெல்லியின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் தேரா சச்சா செளதா மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர்.

30 killed in Dera violence, Section 144 in Delhi

போராட்டக்காரர்களை அடக்க ராணுவம், துணை ராணுவம், மாநில போலீஸ் படைகள் களமிறக்கப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை வெடித்து உள்ளது.

வன்முறைய அடுத்து இரு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க், வாகனங்கள், வருமான வரித்துறை அலுவலகம் என அரசு கட்டிடங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.

கல்வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்களில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வன்முறை சம்பவங்களில் 250க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். 30பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Delhi Police implemented prohibitory order under Section 144 in 11 Delhi districts, which will be in force till 8 September.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X