For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனநலமற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை.. குழாயால் தாக்கி கொல்ல முயற்சி.. மேற்கு வங்கத்தில் கொடூரம்

மேற்கு வங்கத்தில் மனநலம் சரியல்லாத பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பின் மரணம் அடையும் அளவிற்கு தாக்கப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மனநலமற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வஞ்சகர்கள்..வீடியோ

    கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மனநலம் சரியல்லாத பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பின் மரணம் அடையும் அளவிற்கு தாக்கப்பட்டு இருக்கிறார். தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    மிகவும் தாமதமாகவே இவர் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார். இதனால் இவரது உடல் நிலை இப்போது மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த சம்பவம் மேற்கு வங்கத்தின் தினாஜ்புர் என்ற பகுதியில் நடந்து இருக்கிறது. போலீஸ் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    நடந்தது என்ன

    நடந்தது என்ன

    தினாஜ்புர் பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 4 பேர் சேர்ந்த அந்த 35 வயது மனநலமற்ற பெண்ணை வன்புணர்வு செய்து இருக்கிறார்கள். மேலும் இருப்புக் கம்பியால் மோசமாக உடல் முழுக்க தாக்கி உள்ளனர்.

    போராட்டம்

    போராட்டம்

    அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று நினைத்து அந்த நான்கு பேரும் அங்கிருந்து சென்றுள்ளனர். ஆனால் 30 மணி நேரம் அங்கேயே உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். சனிக்கிழமை மதியம் தொடங்கி மறுநாள் இரவு வரை அங்கேயே இருந்துள்ளார்.

    சிகிச்சை

    சிகிச்சை

    அதுவழியாக வந்த மலைப்பகுதி மக்கள், அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கிறார்கள். போலீசுக்கும், மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தற்போது அவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதிரடி

    அதிரடி

    இந்த சம்பவத்தில் மொத்தம் 2 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட ராம் பிரசாத் சர்மா, அகாலு பர்மா ஆகியோர் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இன்னும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    English summary
    4 men rape a mentally challenged woman in Kolkata. Police arrested two convicts named. The victim has admitted in hospital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X