மும்பை கடலில் படகு கவிழ்ந்து 4 குழந்தைகள் பலி... 25 பேர் மீட்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை கடலில் படகில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பலியாகிவிட்டனர். 25 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

மும்பையின் தகானு கடற்கரையில் பள்ளியை சேர்ந்த 40 குழந்தைகள் படகில் சுற்றுலா சென்றனர். அப்போது கடலில் இருந்து 3.7 கி.மீட்டர் தூரத்தில் படகு கவிழ்ந்தது.

4 School children drown in Mumbai sea

இதில் 4 குழந்தைகள் பலியாகிவிட்டனர். மீதமுள்ளவர்களில் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெறுகின்றன. குழந்தைகளை தேடுவதற்காக படகுகள் ஈடுபட்டுள்ளன.

டோர்னியர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
4 school children died and as many as 25 of them were rescued after a boat capsized in Maharashtra's Sea shore.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற