For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டாவுக்கு வயது 40...!

Google Oneindia Tamil News

பெங்களூரு : இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் என்ற பெருமை படைத்த ‘ஆர்யபட்டா' விண்ணில் ஏவப்பட்டதன் 40வது ஆண்டு விழா பெங்களூரு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கடந்த 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, தனது முதல் செயற்கைகோளான ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்தியது. ரஷ்ய நாட்டிலிருந்து இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது. அதன் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 19ம் தேதி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

40th Anniversary of Aryabhata Launch

தற்போது ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டு 40 ஆண்டுகள் ஆகி விட்டது. அதனைக் கொண்டாடும் வகையில் கடந்த 19ம் தேதி பெங்களூரு இஸ்ரோவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், ஆர்யபட்டாவின் தயாரிப்புக் குழு தலைவருமான பேராசிரியர் யு.ஆர்.ராவ், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன், உள்ளிடோடர் கலந்து கொண்டனர்.

இஸ்ரோ தலைவர் கிரண் குமார், மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். கஸ்தூரிரங்கன், தனக்கும், ஆர்யபட்டா திட்டத்திற்குமான தொடர்பு குறித்து விளக்கி் பேசினார்.

இந்திய விண்வெளித் திட்டங்Kளுக்கு சிறப்பாக பங்காற்றியவர்களுக்கான 2010, 2011 ஆகிய ஆண்டுகளுக்கான விருதும் இந்த விழாவின்போது தரப்பட்டது. 2010ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது கர்னல் பந்த்துக்கு தரப்பட்டது. 2010ம் ஆண்டுக்கான சிறப்பு பங்காளருக்கான விருது ஆராவமுதனுக்கு தரப்பட்டது.

ஆர்யபட்டா திட்டத்தில் பங்காற்றிய பொறியார்கள், விஞ்ஞானிகள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

5ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த மிகச் சிறந்த வானியலாளர் மற்றும் கணித நிபுணர் ஆர்யபட்டா் ஆர்யபட்டா. இவரை நினைவு கூறும் வகையில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளுக்கு ஆர்யபட்டா என பெயர் வைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
On the occasion of the 40th anniversary of the launch of India's first satellite Aryabhata, a function was organised at ISRO Satellite Centre, Bengaluru on Sunday, April 19, 2015 to observe that historic event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X