For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி., கோவா, பஞ்சாபில் தொங்கு சட்டசபை.. உத்தரகண்ட்டில் பாஜக வெல்லும்: 'தி வீக்' போல்

5 மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தி வீக் மற்றும் ஹன்சா நிறுவனங்கள் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், உத்தரப் பிரதேசம், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையால் பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. ஆகவே உத்தரப் பிரதேசம் மற்றும் கோவாவில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக இடம்பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத் ஆத்மி கட்சி குறிப்பிடத்த இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பாஜக

உத்தரப்பிரதேசத்தில் பாஜக

உத்தரப்பிரதேசத்தில் பாஜக 192 முதல் 196 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சி - காங்கிரஸ் கூட்டணி 178 முதல் 182 இடங்களில் வெல்லும் என்றும், பகுஜன் சமாஜ் கட்சி 20 முதல் 24 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சியினர் 5 முதல் 9 இடங்களில் வெல்லும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி

காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி

பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 இடங்களில் காங்கிரஸ் கட்சி 49 முதல் 51 இடங்களில் வெல்லும் என்றும் ஆம் ஆத்மி கட்சி 33 முதல் 35 இடங்களில் வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இதே போல சிரோமணி அகாலிதளம் - பாஜக கூட்டணி 28 முதல் 30 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் மற்ற கட்சியினர் 3 முதல் 5 இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் பாஜக

உத்தரகண்ட் பாஜக

உத்தரகண்ட் மாநிலத்தில் 70 இடங்களில் 37 முதல் 39 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி 27 முதல் 29 இடங்கள் வரை வெல்லும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி 1 முதல் 3 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கோவா - பாஜக

கோவா - பாஜக

கோவாவில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளில் பாஜக 17 முதல் 19 இடங்களைக் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கட்சி 11 முதல் 13 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி கோவாவில் 2 முதல் 4 இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயேச்சைகள் 2 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளது என்றும் எம்.ஜி. பார்ட்டி 3 முதல் 5 இடங்களை பிடிக்கும் எனறும்

English summary
The upcoming Assembly elections, another poll conducted by THE WEEK-Hansa Research has predicted that the BJP would emerge as the largest single party in Uttar Pradesh and Goa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X