ஆவி பிடிச்சிருக்கு! மந்திரவாதி பேச்சை கேட்டு 6 மாத குழந்தையை தீயில் தொங்கவிட்ட பெற்றோரால் விபரீதம்!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 6 மாத குழந்தைக்கு ஆவி பிடித்ததாக மந்திரவாதி கூறியதை அப்படியே நம்பிய பெற்றோர், குழந்தையை தலை கீழாக கட்டி தீ குண்டத்திற்கு நேராக தொங்க விட்டதால் விபரீத சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சிவ்புரி மாவட்டம், கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் அந்த குழந்தை சதா சர்வகாலமும் அழுதுக் கொண்ட இருந்ததாம். குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது, அழுது கொண்ட இருக்கிறது என்றால் பொதுவாக மருத்துவமனைக்குத்தான் தூக்கிச் செல்வோம்.
மூடநம்பிக்கை
ஆனால் இந்த தம்பதியோ வித்தியாசமாக மூட நம்பிக்கையின் பேரில் அதே கிராமத்தில் உள்ள ராகவீர் எனும் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். அந்த மந்திரவாதியோ, இதுதான் சாக்கு என நினைத்து, குழந்தையின் உடலில் ஆவி புகுந்துவிட்டதாக தெரிவித்தாராம்.
குழந்தைக்கு ஆவி
இதனை அதிர்ச்சி அடைந்தபடியே தம்பதி நம்பியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த தம்பதி, ராகவீரிடம், "ஐயா எங்களுக்கு இப்போதுதான் இந்த குழந்தை பிறந்தது. எப்படியாவது அந்த குழந்தையின் உடலில் இருக்கும் ஆவியை வெளியேற்றுங்கள்" என கேட்டுள்ளனர்.
தீக்குண்டத்தில் இறக்கிய மந்திரவாதி
உடனே ராகவீரும், கவலைப்படாதீர்கள், இதை எப்படி ஓட்டுவது என எனக்கு தெரியும் என கூறி அந்த இடத்தில் செங்கல்களை அடுக்கி தீயை மூட்டினாராம். பின்னர் குழந்தையை தலை கீழாக கட்டி அந்த தீ குண்டத்திற்கு நேராக தொங்க விட்டாராம்.
வெப்பம்
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் குழந்தை உடலில் வெப்பம் பட்டு அலறியது. ஆனாலும் அந்த தம்பதி வேண்டாம் என சொல்லாமல் அப்படியே நின்றுகிடந்ததாக தெரிகிறது. இதனால் அந்த குழந்தைக்கு கண் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
குழந்தையை மீட்டு
இதனால் பதறிய பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனராம். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் கண் பகுதியில் கடுமையாக பாதிப்பு இருப்பதை பார்த்துவிட்டு பெற்றோரிடம் விசாரித்தனர்.
அதிர்ந்த மருத்துவர்கள்
அப்போது அவர்கள் நடந்ததை தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இப்படிதான் மூடநம்பிக்கையில் திளைப்பீர்களா, இப்போது அழைத்து வந்ததை போல் முன்கூட்டியே அழைத்து வந்திருக்கலாமே என திட்டினார்களாம்.
தீவிர சிகிச்சை
தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த குழந்தைக்கு பார்வை இழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம். எனினும் குழந்தையின் கண் பார்வை திறன் குறித்து 2 நாட்கள் கழித்துதான் எதையும் சொல்ல முடியும் என தெரிவித்துள்ளனராம். எந்த குறையும் இல்லாமல் கடவுள் படைத்து அதை இந்த பெற்றோரிடம் கொடுத்தால் இவர்கள் பேய், பிசாசு என நம்பி குழந்தையின் பார்வைத் திறனுடன் விளையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications