பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுக்கும் மேலாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இது மிகுந்த எதிர்பார்ப்பை தமிழக மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications