For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.: பள்ளி கட்டணம் செலுத்தாததால் ஆசிரியரால் தாக்கப்பட்ட 7 வயது சிறுவன் பலி

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்தாத 7 வயது மாணவனை ஆசிரியர் தாக்கியதில் அவர் மரணம் அடைந்தார்.

உத்தர பிரேதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நன்காரா கிராமத்தைச் சேர்ந்தவர் அராஜ்(7). அவர் அப்பகுதியில் உள்ள துவக்கப் பள்ளியில் படித்து வந்தார். அவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் பள்ளிக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறி ஆசிரியர் அராஜின் தலையை சுவற்றில் வேகமாக மோதியுள்ளார்.

7-year-old UP school boy thrashed by teacher for not paying school fees, dies

இதில் தலையில் படுகாயம் அடைந்த மாணவனை பள்ளி நிர்வாகத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது குறித்து அராஜின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே சிறுவன் சிகிச்சை பலனில்லாமல் பலியானார். இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் மேனஜேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் கிராமத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிறுவன் வீட்டுப்பாடம் செய்யாமல் வந்ததால் தான் ஆசிரியர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 7-year old boy died after he was attacked by his school tacher for non payment of fees in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X