சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சுக்மா: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 9 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையை சிஆர்பிஎப் வீரர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் மறைந்திருந்து கண்ணிவெடியை வெடிக்கச் செய்தனர்.

8 CRPF men killed in Maoist attack

இதில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது சுக்மா வனப்பகுதியில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+