வெறிச்செயல்! 11 வயது மாணவனை கொலை செய்த 13 வயது சக மாணவன்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
சண்டிகர்: ஹரியானாவில் மாணவர் ஒருவர் படிக்க விரும்பாத காரணத்தினால், சக மாணவரை கழுத்து நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். மதராசாவில் இந்த கொலை நிகழ்த்தப்பட்டுள்ளதால் இதர மாணவர்கள் மத்தியில் அச்சம் மேலோங்கியுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாணவர் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

சிறுவன் படுகொலை
ஹரியானா மாநிலம் நூஹ் எனும் இடத்தில் இஸ்லாமிய கல்வி மையம் (மதராஸா) ஒன்று அமைந்துள்ளது. இதில் 11 வயது சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறை இது கொலை என்பதை உறுதி செய்தனர். மேலும், டெட் கிராமத்தில் வசிக்கும் சமீர் எனும் மாணவன்தான் உயிரிழந்துள்ளதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கொலை செய்தது யார் என்பது குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

திட்டம்
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டது 13 வயது சிறுவன் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், இவர்கள் இருவரும் இதே மதராஸாவில் ஒன்றாக கல்வி பயின்று வந்ததும், இவர்கள் நண்பர்கள் என்பதும் கொலை செய்த மாணவன் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். வெள்ளிக்கிழமை கொலை செய்ய முதலில் திட்டம் தீட்டப்பட்டதாகவும், ஆனால் அன்று தொழுகைக்கு அதிக கூட்டம் வந்ததால் சனிக்கிழமை கொலையை செய்ததாக சக மாணவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலை
முதலில் இந்த கொலை சம்பவத்தில் மாணவன் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால் மாணவர்களிடையே விசாரித்ததில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மதரஸாவின் கீழ்த்தளத்தில் உள்ள அறைக்கு சமீரை சக மாணவன் அழைத்து சென்றுள்ளார். பின்னர் சமீரின் கழுத்தை நெறித்து கொன்று உடலை மண்ணில் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. செப்.3ம் தேதி இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. செப்.5ம் தேதி சமீரின் உடல் மீட்கப்பட்டது.

விசாரணை
கொலைக்கான நோக்கம் குறித்து விசாரிக்கையில், தான் தொடர்ந்து படிக்க விரும்பாததால்தான் இந்த கொலையை செய்துள்ளதாக சக மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார் என நூஹ்வின் காவல்துறை கண்காணிப்பாளர் வருண் சிங்லா கூறியுள்ளார். படிப்பது பிடிக்காததால் சக மாணவனை, மாணவன் ஒருவன் கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications